📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 09:03 AM

 அமைச்சர் வழக்கை தள்ளுபடி செய்ய ஸ்டாலின் மனு

 அமைச்சர் வழக்கை தள்ளுபடி செய்ய ஸ்டாலின் மனு

சென்னை: தனக்கு எதிராக, அவதுாறான செய்தி வெளியிட்டதற்காக, ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்த வழக்கு, நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:

கட்சியின் பல்வேறு பிரிவுகள், சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவு களுக்கு, கட்சியின் தலைவர் என்பதற்காக என்னை பொறுப்பாக்க முடியாது. வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தி.மு.க., - தகவல் தொழில்நுட்ப பிரிவு அக்.26ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.