அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
சென்னை: சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். தற்போது, சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்பதற்காக கார் மூலம் சென்னை வந்தார்.
அரசு வாகனத்தில் அவர் வந்த நிலையில், அவரது சொந்த காரில் குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சென்னை காட்டாங்குளத்தூர் அருகே குடும்பத்தினர் பயணித்த அமைச்சர் ஜெகதீஸ்வரின் பெயரில் உள்ள கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இறையன்பு,29, என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அமைச்சரின் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்ற அரசு வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த அவரது சொந்த கார் பைக் மீது மோதிய விபத்தில், இறையன்பு (26 வயது) உயிரிழப்பு