அக்டோபர் 25 ஆம் தேதி பிரதமர் மோடி வாரணாசி பயணம் : அன்று விவசாயிகளுக்கு PM கிசான் பணம் கிடைக்குமா ? உண்மை நிலவரம்
PM கிசான் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 6000 ரூபாய் கிடைக்கின்றது. அந்த பணம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகின்றது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் 23 ஆவது தவணை விவசாயிகளுக்கு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது 24 ஆவது தவணைக்காக விவசாயிகள் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.எப்போது PM கிசான் திட்டத்தின் 2000 ரூபாய் பணம் வரும் என்பது தான் ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் அக்டோபர் 25 ஆம் தேதி விவசாயிகளுக்கு அந்த 2000 ரூபாய் பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சமூக தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அது உண்மைதானா ? அக்டோபர் 25 ஆம் தேதி விவசாயிகளுக்கு பணம் கிடைக்குமா ? என்ற விவரங்களை தற்போது காணலாம்அக்டோபர் 25 பணம் வருமா ?பிரதமர் மோடி அவர்கள் அக்டோபர் 25 ஆம் தேதி அன்று வாரணாசி செல்கின்றார். அங்கு அன்றைய தினம் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கின்றார். எனவே தான் அன்றைய தினம் விவசாயிகளுக்கு PM கிஷன் பணம் கிடைக்கலாம் என சொல்லப்படுகின்றது. ஏனென்றால் இதற்கு முன்பு இதுபோல பல நல திட்டங்களில் பங்கேற்கும்போதும் பொது கூட்டங்களில் உரையாற்றும்போதும் பிரதமர் மோடி அவர்கள் ஒரு பட்டனை அழுது பயனாளர்களின் கணக்கிற்கு பணத்தை அனுப்பியிருக்கிறார்.அதைப்போல தற்போதும் வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு பேசும் பிரதமர் அப்போதே விவசாயிகளின் கணக்கிற்கு 2000 ரூபாய் வரவு வைக்கும்படி செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இதெல்லாம் வெறும் கணிப்பு மற்றும் எதிர்பார்ப்பு தானே தவிர இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை மத்திய அரசிடம் இருந்து வெளியாகவில்லை.முந்தைய தவணைஇதற்கு முந்தைய தவணை ஜூன் மாதம் வரவு வைக்கப்பட்டது. எனவே தான் கடந்த தவணை வெளியாகி நான்கு மாதங்கள் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த அக்டோபர் மாதம் இறுதிக்குள் பணம் வரவு வைக்க பட வேண்டும். அந்த வகையில் அக்டோபர் 25 ஆம் தேதி பிரதமர் மோடியின் வாரணாசி பயணத்தின் போது விவசாயிகளுக்கு இந்த பணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது