📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 18, 2026 01:03 PM

மழையால் தப்பித்த இந்தியா.. 2

மழையால் தப்பித்த இந்தியா.. 2

மழையால் தப்பித்த இந்தியா.. 2-2 என தொடரை சமன்செய்தது வெஸ்ட் இண்டீஸ்!

மழை காரணமாக 5வது டி20 போட்டி கைவிடப்பட்டதால், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. ஷாய் ஹோப் 539 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றது.

பரபரப்பாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகளை இந்தியா வென்றிருந்தாலும், 3வது ஒருநாள் போட்டியில் 350 ரன்களை சேஸ்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என முடித்தது.

இந்தசூழலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கிய நிலையில், முதலிரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றது. ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளிலும் பட்டையை கிளப்பிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-2 என சமன்செய்தது.

The rain continues to pour as we keep losing overs.Trivia: West Indies are scheduled to play in Bengaluru for the first time since December 1978, when Sunil Gavaskar was India's captain.Will we get a game tonight?#INDvsWI pic.twitter.com/bphSFr395n

🚨 Players with the Highest Strike Rates in a T20I Innings for India🚨(#INDvsWI)⦿ 362.50 Yuvraj Singh : 58 (14)⦿ 355.55 Hardik Pandya : 32* (9)⦿ 344.44 Rinku Singh : 31* (9)⦿ 300.00 Ishan Kishan : 30 (10) and...SEE MORE pic.twitter.com/tQpF7tZMWc

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 9 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 7.4 ஓவரில் 118 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் இருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நிற்பதுபோல் இருந்ததால் 5 ஓவருக்கு 80 ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதுமட்டும் நடந்திருந்தால் மழை பெய்திருப்பதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக ஸ்கோரை அடித்திருக்கும்.

Nothing to separate the two sides! The #INDvWI T20I series ends in a hard-fought 2-2 draw 🏆Well played @windiescricket 🤝#TeamIndia | @mflone_ pic.twitter.com/hctZnBzn2D

ஆனால் மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. இந்ததொடரில் மட்டும் மொத்தமாக 4 சதங்கள் அடித்து 539 ரன்கள் குவித்த ஷாய் ஹோப் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.