📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 20, 2026 03:00 PM

அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்.. அறிகுறிகள் என்ன? பின்பற்ற வேண்டியவை என்ன?

அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்.. அறிகுறிகள் என்ன? பின்பற்ற வேண்டியவை என்ன?

அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்.. அறிகுறிகள் என்ன? பின்பற்ற வேண்டியவை என்ன?

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தாக்கத்துக்கு மத்தியில், ‘ஸ்கிரப் டைபஸ்' எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பொதுமக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ‘ரிக்கட்ஸியா' வகை பாக்டீரியா தொற்றுள்ள ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகள் மனிதர்களைக் கடிப்பதால் இந்த உண்ணிக் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்ணி கடித்த இடத்தில் சிறிய சிவப்புத் தடிப்பு ஏற்படுவதுடன், கடுமையான தலைவலி, குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இதன்மூலம் உண்டாகும் என மருத்துவத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்வலி, தோல் அரிப்பு, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளும் தென்படக்கூடும் என எச்சரிக்கின்றனர். ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெறாவிட்டால், கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு உள்ளுறுப்புகள் செயலிழப்பதுடன், கோமா மற்றும் மரணம் போன்ற தீவிர ஆபத்துகளும் நேரிடலாம்.

எனவே, பொதுமக்கள் தங்களைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்றும், தோட்டங்கள், பூங்காக்களுக்கு செல்லும்போது பூச்சிகள் கடிக்காதவாறு உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.