📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 22, 2026 10:03 AM

 ஆவின் பால் வினியோகத்தை குறைக்கிறதா த.வெ.க., அரசு?

 ஆவின் பால் வினியோகத்தை குறைக்கிறதா த.வெ.க., அரசு?

கடந்த சில நாட்களுக்கு முன், ஆவின் பால் கொள்முதல் விலை 38 ரூபாயில் இருந்து 44 ரூபாயாக ஆக உயர்த்தப் பட்டது. அந்த நிதியிழப்பை ஈடுகட்ட, அனைத்து மாவட்டங்களிலும், ஆவின் பால் வினியோகம், 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செலவுகள் கூடும்போது, வரவுகளை பெருக்குவது குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு, உற்பத்தியையே நிறுத்துவது என்ன மாதிரியான நிர்வாகம்? கர்நாடக அரசின் 'நந்தினி' பால் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகள், தமிழகத்தில் அதிகம் விற்பனையாகின்றன. இதற்கு, ஆவின் பாலின் தரக்குறைபாடு காரணமா அல்லது தனியார் பால் விற்பனையை பெருக்குவதற்காக, ஆவின் வினியோகத்தை திட்டமிட்டே த.வெ.க., அரசு குறைக்கிறதா?

- நயினார் நாகேந்திரன் தமிழக தலைவர், பா.ஜ.,