📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 22, 2026 05:04 PM

வியட்நாம் கப்பலில் இருந்து 25 சிப்பந்திகள் மீட்பு

வியட்நாம் கப்பலில் இருந்து 25 சிப்பந்திகள் மீட்பு

சிங்கப்பூரின் கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பில் லைபீரியாவில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பலிலிருந்து 25 சிப்பந்திகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

வியட்னாமிற்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தூரத்தில், சிங்கப்பூரின் கடல்துறை தேடல், மீட்பு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்த ‘எம்எஸ்சி ஹேர்மிஸ் மூன்று’ கப்பலிலிருந்து உதவிக் கோரி அழைப்பு வந்ததை அடுத்து சிப்பந்திகள் மீட்கப்பட்டதாகச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) தெரிவித்தது.

காலை 8.45 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததாகச் சொன்ன நிலையம், அருகில் உள்ள கப்பல்கள் உதவிக்குச் செல்லும்படியான சமிக்ஞையை ஒலிபரப்பியது.

நிலையத்தின் அழைப்பிற்கு மூன்று கப்பல்கள் செவிசாய்த்தன. அவற்றுள் எம்எஸ்சி ரூபி என்ற கப்பல் 25 சிப்பந்திகளையும் மீட்டது.

மீட்கப்பட்ட சிப்பந்திகளில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஆணையம் சுட்டியது.

மீட்கப்பட்ட சிப்பந்திகள் பாதுகாப்பாகக் கரைசேர்வதற்கான ஏற்பாடுகளைச் சிங்கப்பூரின் கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமும் வியட்னாமின் கடல்துறை மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமும் செய்துவருவதாகத் தெரிவித்தது.