📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 12, 2026 08:01 AM

விமான கட்டணத்தில் தள்ளுபடி : மாணவர்களுக்காக ஏர் இந்தியா தரும் சூப்பர் ஆஃபர் : சலுகைகளின் முழு விவரங்கள்

விமான கட்டணத்தில் தள்ளுபடி : மாணவர்களுக்காக ஏர் இந்தியா தரும் சூப்பர் ஆஃபர் : சலுகைகளின் முழு விவரங்கள்

விமான கட்டணம் என்பது நடுத்தர மற்றும் சாதாரண குடும்பங்களின் பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று தான் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக கல்லூரி மற்றும் இன்டர்ன்ஷிப் மாணவர்கள் விமானம் மூலம் செல்வதாக இருந்தால் அவர்களின் பெற்றோர்களுக்கு அதிகளவிலான டிக்கெட் விலை நிதி நெருக்கடியை கூட ஏற்படுத்தும். எனவே தான் இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஏர் இந்தியா தற்போது மாணவர்களுக்காக சிறப்பான சலுகைகளை வழங்கியிருக்கின்றது. அக்டோபர் 20 வரை மாணவர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் பயணம் செய்வதாக இருந்தால் அவர்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்ஏர் இந்திய மாணவர்களுக்கான டிக்கெட் தள்ளுபடிஏர் இந்தியா நிறுவனம் இந்த சலுகையை மாணவர்களுக்கு அக்டோபர் 20 ஆம் தேதி வரை வழங்குகின்றதுமாணவர்களுக்கு உள்நாட்டு விமான பயணங்களின் அடிப்படை டிக்கெட் விலையில் 10 % தள்ளுபடி வழங்கப்படுகின்றதுஇந்த சிறப்பு தள்ளுபடி என்பது அக்டோபர் 20 ஆம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்மாணவர்களுக்கான மூன்று நன்மைகள்டிக்கெட் தள்ளுபடி மட்டுமல்லாமல் ஏர் இந்தியா மாணவர்களுக்காக மேலும் சில சலுகைகளை வழங்கியிருக்கின்றதுகல்லூரி ஹாஸ்டலுக்கு செல்லும்போது மாணவர்கள் வீட்டில் இருந்து கூடுதல் பொருட்களை எடுத்து செல்ல வேண்டி இருக்கும். எனவே ஏர் இந்தியா மாணவர்களுக்காக 10 கிலோ கூடுதல் லக்கேஜை எந்த கூடுதல் கட்டணமும் இன்றி எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறதுஇலவசமாக பயண தேதியை மாற்றும் வசதியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்வு அல்லது கல்லூரி சேர்க்கை மாறும் பட்சத்தில் மாணவர்கள் தாராளமாக பயண தேதியை மாற்றியமைத்து கொள்ளலாம்ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் டிக்கெட் புக் செய்தால் Convenience Fee யில் 50 % தள்ளுபடி வழங்கப்படும்UPI ஆஃபர்டிக்கெட் புக் செய்யும்போது UPI வழியே பணம் செலுத்தினால் அதற்கும் சலுகைகள் உண்டு. UPI பயன்படுத்தும்போது UPIPROMO என்ற கோடை பயன்படுத்தினால் 1000 ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்தேவையான ஆவணங்கள்ஏர் இந்தியாவின் இந்த சலுகைகளை பெற மாணவர்களுக்கு 12 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்பள்ளி, கல்லூரிகளில் குறைந்தபட்சம் ஒரு வருட முழுநேர படிப்பில் இணைந்திருக்க வேண்டும்மாணவர் அடையாள அட்டை, சேர்க்கை கடிதம், மாணவர் விசா போன்ற ஆவணங்கள் தேவைப்படுகின்றது