📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 28, 2026 01:03 PM

விஜயிடம் தென்படும் நெருடல்; என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!: அந்துமணி பதில்கள்

விஜயிடம் தென்படும் நெருடல்; என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!: அந்துமணி பதில்கள்

'இமயமலை பருவ பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்' என்று, நேபாள பிரதமர் கூறியிருப்பது குறித்து?

கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும். மேலும் மலையேற்றம் செல்வோருக்கு தகுந்த ஏற்பாடுகளும், அவர்களுக்கான விதிகளையும் கடுமையாக்க வேண்டும். இல்லையெனில் பேரழிவுகள் தான் ஏற்படும்.

'அ.தி.மு.க.,விலிருந்து வந்த வேட்பாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு, 'த.வெ.க., துாய சக்தி, தி.மு.க., தீய சக்தி' என்று எப்படி பேச முடிகிறது?' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறாரே?

ஒரு பெண் கோபப்பட்டால், 'அழகாய் இருக்கிறாய்' என்று ஆண் கூறுகிறான். உண்மையில் அதுபோன்று உண்டா?

'உண்மையோ, இல்லையோ... இல்லறம் இனிக்க இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தேவை' என்கிறார் லென்ஸ் மாமா!

முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா, திரைப்படத்தில் நடிக்க போகிறாராமே?

ஆசை யாரை விட்டது... சினிமாவில்இருந்து பலர் அரசியலுக்கு வரும்போது, அரசியலிலிருந்து சினிமாவுக்கு வருவது ஒன்றும் தவறில்லையே!

மனைவி வேலைக்குச் செல்ல, வீட்டில் இருக்கும் ஆண்களை ஏன் 'இல்லத்தரசர்' என்று அழைக்கக்கூடாது?

கூறலாமே... காசா, பணமா? அப்படி ஒரு மகுடம் கொடுத்தால், அவர்கள் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல மயங்கி விடுவரே!

'ஒரு வெள்ள பேரழிவை சென்னை தாங்காது, மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாரே!

மழைநீர் வடிகால் பணிகள் போர்க்கால அடிப்படையில் தான் நடந்து கொண்டிருக்கிறதே... தரமாக உள்ளதா என்பது மழை வந்தால் தெரியும்!