📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 27, 2026 11:30 PM

வாழ்வியல் இலக்கியப் பொழில்

வாழ்வியல் இலக்கியப் பொழில்

வாழ்வியல் இலக்கியப் பொழில் - கோடைத்தமிழ் உலா 2026(பன்னாட்டுக் கருத்தரங்கம் & கவியரங்கம்) இணையத்தில் நடைபெற்றது. 'மூப்பில்லா முதல் மொழியே' என்ற சிங்கப்பூர்த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக அமைப்பின் உறுப்பினர் மோகனபிரியா மாலைப்பொழுதில் இலக்கியப்பொழிலில் இளைப்பாற இணையம்வழி இணைந்தோர் யாவரையும் வரவேற்று மகிழ்ந்தார். தொடர்ந்து வாழ்வியல் இலக்கியப் பொழிலின் 'பொழில் வாழ்த்துப் பாடல்” இசைக்கப்பட்டது.

தமிழ்நாட்டிலிருந்து புலவர் அ. பொன்னையன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து வந்த பொழிலின் தலைவர் பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி நோக்கவுரையில் அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும் விழாவின் நோக்கங்கள் பற்றியும் விவரித்தார்.

அடுத்ததாக பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடங்கியது. 'அகன்ற மரம் ஆழ்ந்த வேர்' என்னும் தலைப்பிலான கருத்தரங்கத்தில் 5 மகான்களின் வெற்றிக்கு உதவி புரிந்த அவர்களுடைய துணைவியரின் சிறப்புகளை தலா2 ஆய்வாளர்கள் வீதம்10 பேர் படைத்தனர்.

யசோதரை (புத்தர்) பற்றி அமெரிக்காவிலிருந்து ஜெயாமாறன் மற்றும் தஞ்சாவூரிலிருந்து தேவ.சார்லி மேன்; கஸ்தூரி பாய் (காந்தி) பற்றி சென்னையிலிருந்து கீதாஅருண், திருச்சியிலிருந்து முனைவர் ம. தமிழ்ச்செல்வி மற்றும் இலங்கையிலிருந்து முனைவர் ஜெயா உதயா; செல்லம்மாள் (பாரதியார்) பற்றி ஆஸ்திரேலியாவிலிருந்து முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் மற்றும் சிங்கப்பூரிலிருந்து சி. கற்பகலட்சுமி; மிருணாளினி (அரவிந்தர்) பற்றி புதுச்சேரியிலிருந்து முனைவர் க. ரேவதி மற்றும் சென்னையிலிருந்து முனைவர் ந. தீபாராணி; சாரதா தேவி (இராமகிருஷ்ண பரமஹம்சர்) பற்றி திருச்சியிலிருந்து முனைவர் கரு. கலையரசி மற்றும் தருமபுரியிலிருந்து இரா.காயத்ரி ஆகியோர் பற்பல புதிய செய்திகளுடன் அழகுற படைத்தனர்.

அடுத்து, பன்னாட்டுக் கவியரங்கத்தில், 16 பேர் கவி பாடினர். 'பருவங்கள்' என்ற பொதுதலைப்பில் 5 உட்தலைப்புகளோடு தலா 3 பேர் கவிபாடினர். அமைப்பின் தலைவர் பாவலர்எல்ல. கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்ற இக்கவியரங்கத்தில் ஆண் என்னும் உட்தலைப்பில் புதுக்கோட்டையிலிருந்து முனைவர் சிவகவி காளிதாசன், வே. ஜெயந்தி நாகராஜன் மற்றும் விழுப்புரத்திலிருந்து க. யாஸ்மின் சிராஜீதீன்;பெண் என்னும் உட்தலைப்பில் இலங்கையிலிருந்து மருத்துவர் கோபிஷா உதயகுமார் மற்றும் செங்கல்பட்டிலிருந்து வி. ஜெயந்தி; மலர் என்னும் உட்தலைப்பில் திண்டுக்கலிலிருந்து இர. இந்திராணி, இலங்கையிலிருந்து றொக்சினி மற்றும் சென்னையிலிருந்து முனைவர் அ. ரேவதி; ஆண்டுப் பருவம் என்னும் உட்தலைப்பில் புதுக்கோட்டையிலிருந்து அன்பரசு; மதுரையிலிருந்து கா. காயத்ரி தேவி மற்றும் இலங்கையிலிருந்து மருத்துவர் மஞ்சுளா சந்திரகுமார்; நாள் பருவம் என்னும் உட்தலைப்பில் மதுரையிலிருந்து ப.பூரணவள்ளி, திருவள்ளூரிலிருந்து க.முருகேஸ்வரி ஆகியோர் கவிநயத்துடன் அழகுற படைத்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே, பிரதிபா மற்றும் வே. ஜெயந்தி அழகுற நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர். கற்பகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாவருக்கும் மறவாமல் நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து மேமாதம் பிறந்தநாள் கொண்டாடும் வே. நிரஞ்சனா, பிறந்தநாள் வாழ்த்துப் பாடலுடன் சிறப்பான முறையில் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

முகநூலில்கண்டுகளிக்க:

https://www.facebook.com/share/v/1TNjtxkknZ/

அமைப்பின்இணையப்பக்கம்: https://www.ilakkiyapozhil.com

- நமது வாசகர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி