📅 Friday, 10 July 2026 IST | ஆனி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 10, 2026 10:33 AM

வார கடைசி நாளில் தங்கம் விலை உயர்வு; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

வார கடைசி நாளில் தங்கம் விலை உயர்வு; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் நேற்று ஏற்றம், இறக்கமாக காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 08), ஒரே நாளில் தங்கம் விலையில், மூன்று முறை மாற்றம் ஏற்பட்ட நிலையில், சவரனுக்கு, 1,200 ரூபாய் குறைந்தது. இதனால், ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய (ஜூலை 9) தினமும் காலையில் ரூ.240 குறைந்த தங்கத்தின் விலை, மாலை ரூ.800 அதிகரித்தது. இதனால், ஒரு சவரன் ரூ.1,06,560க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.13,320 ஆக விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.13,350க்கும் வர்த்தகமாகிறது. வெள்ளி விலையில் மாற்றமும் இல்லை. ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனையாகிறது.

தற்போது மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், கடந்த சில தினங்களாக சரிந்து வந்த தங்கம், வெள்ளி விலை உயருமோ? என்ற அச்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.