📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 26, 2026 12:03 PM

டிரைவர் & வீட்டு பணிப்பெண்ணுக்காக ரூ.25,000 சேமிப்பு முதலீட்டை தொடங்கிய நபர்

டிரைவர் & வீட்டு பணிப்பெண்ணுக்காக ரூ.25,000 சேமிப்பு முதலீட்டை தொடங்கிய நபர்

ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர், தன்னிடம் வேலை பார்த்து வரும் டிரைவர், வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கு பென்சன் மற்றும் வருங்கால வைப்பு நிதி இல்லாததால், அவர்கள் வயதான காலத்தில் பயனடையும்படி அரசாங்க சேமிப்பு திட்டம் ஒன்றை தொடங்கி, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நரேஷ் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரிடம் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண் என இரண்டு பேர் வேலை செய்து வந்துள்ளனர்.

அவர்களுக்கு நரேஷ் மாதந்தோறும் வழங்கிய சம்பளத்தில், அரசு ஓய்வூதிய திட்டமான பென்சன் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஆகியவை பிடித்தம் செய்ய முடியாத சூழல் இருந்துள்ளது.

இதன் காரணமாக அவர் தன்னிடம் வேலை பார்த்து வந்த ஓட்டுநர் மற்றும் பணிப்பெண்ணுக்கு, கிசான் விகாஷ் பத்ரா என்ற அரசாங்க சேமிப்பு திட்டத்தை தொடங்க முடிவு செய்தார்.

இந்த சேமிப்பு திட்டமானது 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காகும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து அவர்கள் பெயரில் ஆண்டிற்கு 25,000 ரூபாய் பங்களிப்பின் மூலம் ‘கிசான் விகாஷ் பத்ரா’ என்ற சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், முறையான ஓய்வூதிய பலன்கள் இல்லாத ஊழியர்களுக்கு, இதுபோன்ற முதலீடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் அந்த பதிவில், உங்களிடம் நம்பிக்கைக்குரிய ஊழியர்கள் வேலை செய்து வந்தால், அவர்களின் ஓய்வூதியத்திற்காக ஒரு சிறிய முதலீடுகளை செய்வதை பற்றி யோசிக்குமாறும் கூறியுள்ளார்.

நீங்கள் ஒரு பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினால், அது ஒரு நல்ல தொடக்கம்தான் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் முதுமைக் காலம், பணம் சார்ந்த கஷ்டம் இல்லாமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நரேஷின் இந்த பதிவு, சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பதிவிற்கு பயனர் ஒருவர், தங்க மனதுடைய நபர் என்றும், இது ஒரு உன்னதமான செயல் என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு நபர், நல்ல முயற்சி தான்; ஆனால் இதுபோன்ற நேர்மையான நபர்களை சந்தித்து, அவர்களின் உதவியை பெறுவது கடினமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.