Business
September 26, 2026 06:04 AM
'மார்ச் 2027க்குள் தங்கம் சவரன் ரூ.2 லட்சம் தொடும்'
சென்னை: வரும் 2027 மார்ச் மாதம், தங்கத்தின் விலை, சவரன் 2 லட்சம் ரூபா யை தொடும் என, தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திரால் சலானி தெரிவித்துள் ளார்.
சென்னையில், 3 நாட்கள் நடைபெறும் நகை வர்த்தக கண்காட்சியில் அவர் மேலும் பேசியதாவது: இக்கண்காட்சியில் தெ ன்னிந்திய அளவில், நகைக்கடை வியாபாரிகள் 15,000 பேர் பார்வையிட்டு நகைகளை கொள்முதல் செய்வர். 10,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் .
தங்க நகைகள் 18 கேரட், 14 கேரட், 9 கேரட் என அறிமுகமாகி வருகின்றன. மக்கள் இந்த நகைகளை வாங்கி பயன்பெறலாம். இதன் சந்தை மதிப்பு குறைவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
Business