📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 22, 2026 11:02 AM

தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் வைகோ, திருமாவளவன் பெயர்கள் நீக்கம்

தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் வைகோ, திருமாவளவன் பெயர்கள் நீக்கம்

சென்னை: இடைத்தேர்தலுக்கான த.வெ.க., நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து, கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் அக்டோபர் 6ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதில் பிரசாரம் செய்வதற்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கொடுத்த பட்டியலின் அடிப்படையில், நட்சத்திர பேச்சாளர்களை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது.

அதன்படி, த.வெ.க., நட்சத்திர வேட்பாளர் பட்டியலில், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜ்மோகன், ரமேஷ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றன.

மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களான காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பெயர்களும் இருந்தன.

கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களை, த.வெ.க., நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சேர்த்ததற்கு, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

மேலும், 'த.வெ.க., நட்சத்திர பேச்சாளர் பட்டியலில், பிற கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க., உள்ளிட்டவற்றின் தலைவர்களை சேர்த்தது சட்ட விரோதம். அவர்களின் தேர்தல் பிரசார செலவுகளை த.வெ.க., வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனில், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான த.வெ.க., நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து, காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக், ம.தி.மு.க., ஆகிய கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.