தொட்ட காரியங்கள் வெற்றியில் முடியும்...வார ராசிபலன்: செப்டம்பர் 13 முதல் 19 வரை..!
ராசிக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சியாகவும், நான்காம் வீட்டில் குரு உச்சமாகவும் இருப்பது சிறப்பான அமைப்பாகும். இந்த வாரம் தொட்ட காரியங்கள் வெற்றியில் முடியும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வரவுகள் அதிகரிக்கும் அதே வேளையில், சுப காரிய செலவுகளும் தொடரும்.
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குச் சமூகத்தில் நல்ல மரியாதையும், மக்கள் மத்தியில் ஆதரவும் பெருகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விரிவாக்க முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். வேலைப் பளு சற்று அதிகமாக இருந்தாலும் சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள்.
உடலில் பித்த உபாதைகள் அல்லது கண் எரிச்சல் தோன்றி மறையலாம். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யலாம். செம்பருத்தி மலர் சமர்ப்பித்து ஸ்ரீ நரசிம்மரை வழிபடுவது நன்மைகளைத் தரும். இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - சிறிய பவளம்
ராசிக்கு ஐந்தாம் வீட்டில் புதனும் சந்திரனும் இணைந்திருப்பதும், பதினொன்றாம் வீட்டில் சனி பகவான் இருப்பதும் சிறப்பான பலன்களைத் தரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகி பணப்புழக்கம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக வராத நிலுவைத் தொகைகள் வசூலாகும். சேமிப்பு அதிகரிக்கும்.
குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி இணக்கம் ஏற்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு உயரும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் எதிர்பாராத பணி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும்.
வயிறு சம்பந்தப்பட்ட சிறு கோளாறுகள் ஏற்படும் என்பதால் உணவுப் பழக்கத்தில் கவனம் தேவை. தினமும் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது. இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - சின்ன படிகாரக் கல்.
ராசிக்கு இரண்டாம் வீட்டில் குரு உச்சமாகவும், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சியாகவும் இருப்பது யோக அமைப்பாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வருமான வழிகள் திறக்கும். வரவுக்கு ஏற்ற செலவு என்றாலும் நிதி நிலையைத் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடைபெறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். சமுதாயத்தில் உங்கள் பேச்சுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டாகும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்படுவீர்கள்.
வியாபாரம் மற்றும் வர்த்தகத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறம வெளிப்பட்டு நல்ல பெயர் கிடைக்கும். எனினும் ஜென்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் வேலை இடத்தில் சிறு கோபத் தேவைகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிக வேலைப் பளுவால் உடல் அசதியும் தலைவலியும் வரலாம். தினமும் துளசி தீர்த்தம் அருந்தி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையளிக்கும். இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - பச்சைக் கற்பூரம்
ராசியில் குரு பகவான் உச்சம் பெற்று அமர்ந்திருப்பது அனைத்துக் காரியங்களிலும் நன்மைகளைத் தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும் இனிய வாரமிது. பொருளாதார நிலை வெகுவாக உயரும். பணவரவு தாராளமாக இருக்கும். நிலம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் பெருகும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். பொதுவாழ்வில் உங்களின் தலைமைப் பண்பு வெளிப்பட்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். தொழில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும்.
சளி மற்றும் தொண்டை சார்ந்த அசௌகரியங்கள் ஏற்படலாம். தினமும் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து அல்லது தியானித்து வழிபடுவது நல்லது. இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - வெள்ளை நிற மலர்கள்.
உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சியாகவும், பதினொன்றாம் வீட்டில் செவ்வாயும் இருப்பது நன்மைகளைத் தரும். தைரிம், தன்னம்பிக்கை கூடும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அவசியமான செலவுகளை மட்டும் செய்வீர்கள்.
குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். பொது வாழ்வில் உங்களின் கருத்துக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
தொழிலில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். வியாபார விரிவாக்கத்திற்கு வங்கிக் கடன்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பயணங்கள் மூலம் நன்மைகள் உண்டாகும்.
ஜென்ம ராசியில் சூரியன்-கேது இருப்பதால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தை கேட்பதுடன் சூரியநாராயணரை மானசீகமாக வழிபடுவதும் சிறந்தது. இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - பஞ்சமுக ருத்ராட்சம்.
ராசியிலேயே புதனும் சந்திரனும் இணைந்திருப்பதும், பத்தாம் வீட்டில் செவ்வாயும், பதினொன்றாம் வீட்டில் குருவும் இருப்பது மிகுந்த சுப பலனைத் தரும். எடுத்த காரியங்கள் சுலபமாக நிறைவேறும். நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். வரவுகள் அதிகரித்து கடன் சுமைகள் குறையும்.
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தடையின்றி நடக்கும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களிடம் நல்ல ஆதரவு கிடைக்கும். பொது வாழ்வில் உங்களின் புகழ் மற்றும் செல்வாக்கு உச்சத்தை எட்டும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் பதவி உயர்வும் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும்.
நரம்பு தளர்ச்சி அல்லது அஜீரணக் கோளாறுகள் தோன்றி மறையலாம். தினமும் பெருமாள் ஆலயத்தில் நெய் தீபமேற்றி ஸ்ரீ சுதர்சனரை வழிபடுவது நன்மையளிக்கும். இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - பச்சை துணியில் மடித்த ஏலக்காய்.
ராசியில் சுக்கிரன் ஆட்சியாக அமர்ந்திருப்பதும், பத்தாம் வீட்டில் குரு உச்சமாக இருப்பதும் சிறப்பான யோக அமைப்பாகும். மனநிம்மதியும் சந்தோஷமும் பெருகும். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கைவந்து சேரும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் சுமுகமான உறவு நீடிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். சமூகத்தில் மரியாதைக்குரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுவாழ்வில் நல்ல நற்பெயர் உண்டாகும்.
தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த சிக்கல்கள் விலகி சுமூகமான சூழல் நிலவும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனைத் தரும்.
உடலில் சோர்வும் பாத வலியும் வந்து நீங்கும். தினமும் ஸ்ரீ சூக்தம் பாராயணம் செய்து ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வழிபடுவது நலம் தரும். இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - ரோஜாப்பூ
விருச்சிகம்
ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு உச்சமாகவும், பதினொன்றாம் வீட்டில் புதனும் சந்திரனும் இருப்பது தொட்டதெல்லாம் துலங்கும் அமைப்பாகும். பாக்கிய பலன்கள் பெருகும். நிதி நிலைமை சீராகி பணப்புழக்கம் அதிகரிக்கும். நிலுவை தொகைகள் வந்து சேரும். விரயச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். தந்தை வழியில் நன்மைகளும் சொத்து சேர்க்கையும் உண்டாகும். பொது வாழ்வில் நற்பெயரும் புகழும் அதிகரிக்கும்.
தொழில் முன்னேற்றம் பாதையில் செல்லும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி மேலதிகாரிகளின் அன்பைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தி தரும்.
இரத்த அழுத்தம் அல்லது உஷ்ண உபாதைகள் தோன்றி மறையலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபடுவது சிறந்தது. இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - சிறிய வேல் சின்னம்.
ராசிக்கு பத்தாம் வீட்டில் புதனும் சந்திரனும் இணைந்திருப்பதும், பதினொன்றாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சியும் சுப பலனைத் தரும். பொருளாதார தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் கைகூடும்.
குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொதுவாழ்வில் உங்களின் சொல்லுக்கு மதிப்பு கூடும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் நிதி லாபமும் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றமும் ஊதிய உயர்வும் கிடைக்க சிறப்பான வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி தரும்.
எலும்பு மற்றும் தசைப்பிடிப்பு சார்ந்த அசௌகரியங்கள் ஏற்படலாம். தினமும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தியானிக்கவும். அருகில் உள்ள எந்த கோவிலிலும் மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - விரலி மஞ்சள் துண்டு.
ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு உச்சமாகவும், ஒன்பதாம் வீட்டில் புதனும், பத்தாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சியாகவும் உள்ளதால் மிகச் சிறந்த வாரம் இது. தன வரவு அதிகரிக்கும். கடன் தொல்லைகள் அகலும். புதிய முதலீடுகள் மூலம் லாபம் பெருகும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வாழ்க்கைத் துணையால் நன்மைகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் கை ஓங்கும். பொது வாழ்வில் செல்வாக்கு உயரும்.
வியாபாரம் மற்றும் வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சி காணப்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் அதிகார யோகமும் கிடைக்கும். சக ஊழியர்கள் முழு ஆதரவு தருவர்.
கால் வலி அல்லது வாயுப் பிடிப்பு சார்ந்த சிரமங்கள் வரலாம். தினமும் சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வைப்பதும், ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மைகளைத் தரும். இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - குதிரை லாடம்.
ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு உச்சமாகவும், ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சியாகவும் இருப்பது மறைமுகமான யோகம் தரும். எதிர்ப்புகள் அகலும். பணப்புழக்கம் சீராக இருக்கும். திடீர் தனலாபம் உண்டாக வாய்ப்புள்ளது. வீட்டுத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரிக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். பொதுவாழ்வில் உங்களுக்கு இருக்கும் தடைகள் விலகி நற்பெயர் கிடைக்கும்.
தொழிலில் நல்ல போட்டியைச் சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களுக்கு சிறப்பான வாரமாக அமையும்.
தோல் சார்ந்த ஒவ்வாமை அல்லது வயிற்று உபாதைகள் ஏற்படலாம். தினமும் ஸ்ரீ பைரவர் வழிபாடும், ஆதரவற்றோருக்கு அன்னதானமும் செய்வது சிறந்தது. இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - வெள்ளி மோதிரம்.
ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு உச்சமாகவும், ஏழாம் வீட்டில் புதனும் சந்திரனும், எட்டாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சியாகவும் உள்ளனர். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத யோகங்கள் தேடி வரும். வரவுக்கு ஏற்ற செலவுகள் வந்தாலும் சுப விரயமாக மாறும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். பொதுவாழ்வில் மரியாதை கூடும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி தரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறைந்தாலும் உங்களின் உழைப்பிற்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.
ஜென்ம ராசியில் வக்கிர சனி இருப்பதால் மன உளைச்சல் அல்லது தூக்கமின்மை வரலாம். தினமும் ஸ்ரீ ராகவேந்திரர் அல்லது உங்கள் குல குருமார்களை வழிபட்டு துளசி தீர்த்தம் அருந்துவது நல்லது. இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் பொருள் - தாமரை மணி மாலை.