தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய்யை நான் புகழ்ந்து பேசவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி விளக்கம்
தவெக தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான விஜய் சிறப்பாக செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி சஞ்சய் குமார் பாராட்டி பேசியதாக சமீபத்தில் தகவல் வெளியானது .ஆனால் இதனை நீதிபதி சஞ்சய் குமார் மறுத்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறியீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், இதனை நான் விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதி அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
சிங்கப்பூரில் இருந்து கூட
தவறான தகவல்
முதல் அமைச்சர் வேகமாக செயல்பட விரும்புகிறார் என்றால் நீங்கள் ஏன் மெதுவாக செயல்படுகிறீர்கள். வழக்கை ஏன் ஒத்திவைக்க கோருகிறீர்கள் என்ற பொருளில் நான் கூறியிருந்தேன். அது அப்படியே தவறாக தகவல் பரப்பப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை புகழ்ந்து பேசியதாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
சரியாக இருக்காது