📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 25, 2026 07:02 PM

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த பரணிகா.. போல் வால்ட் விளையாட்டில் முதல் ஆசிய விளையாட்டு பதக்கம்

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த பரணிகா.. போல் வால்ட் விளையாட்டில் முதல் ஆசிய விளையாட்டு பதக்கம்

தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த பரணிகா.. போல் வால்ட் விளையாட்டில் முதல் ஆசிய விளையாட்டு பதக்கம்

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த போல் வால்ட் (Pole Vault) வீராங்கனை பரணிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். பெண்களுக்கான போல் வால்ட் பிரிவில், ஆசிய விளையாட்டு வரலாற்றிலேயே பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்து இருக்கிறார். நகோயா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், பரணிகா 4.15 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாகத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்தார். கஜகஸ்தான் வீராங்கனை போலினா இவானோவாவும் இதே 4.15 மீட்டர் உயரத்தைத் தாண்டினார். இருவரும் சம புள்ளிகள் பெற்றதால், வெண்கலப் பதக்கம் இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஆசிய விளையாட்டில் 10,000 மீ ஓட்டத்தில் 2 பதக்கம் வென்ற ஒரே இந்தியர்.. குல்வீர் வெள்ளி வென்று சாதனை கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட பரணிகா, மனம் தளராமல் கடினமாக உழைத்து தற்போது வரலாறு படைத்து வெண்கலப் பதக்கத்தை வென்று இருக்கிறார். தமிழ்நாட்டு கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்து சர்வதேச தடகள அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திய பரணிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.