📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 13, 2026 07:04 PM

தமிழ்நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 5.54 விழுக்காடாக உயர்ந்து, உணவுப் பணவீக்கம் 7.74 விழுக்காட்டை எட்டியது

வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் திடீர் விலையேற்றமே இந்த உயர்வுக்குக் காரணம் என்று தேசியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

இந்தியாவிலேயே அதிகபட்சமாகத் தமிழகத்தில் சில்லறைப் பணவீக்கம் 6.81 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

விலைவாசி நிலவரத்தைக் கணக்கிடும் சில்லறை பணவீக்கம், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இவ்வாண்டு ஜனவரியில் 2.75 விழுக்காடாக இருந்த பணவீக்கம், செப்டம்பரில் 5.54 விழுக்காடாக அதிகரித்தது.

இது தொடர்ந்து எட்டாவது மாதமாக ஏற்படும் உயர்வாகும்.

உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தின் 5.97 விழுக்காட்டில் இருந்து செப்டம்பரில் 7.74 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

பொருள்களின் அடிப்படையில் வெங்காயம் (108.09%), வெள்ளி நகைகள் (87.8%), இஞ்சி (62.85%), பூண்டு (54.62%) ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தேசிய அளவில் சராசரிப் பணவீக்கம் 5.54 விழுக்காடாக இருந்தாலும், நகர்ப்புறங்களைவிட (4.88%) கிராமப்புறங்களில் இதன் தாக்கம் 6.08 விழுக்காடாக மிக அதிகமாக உள்ளது. அதனால் கிராப்புற மக்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தின் நிலை

நாட்டிலேயே அதிகபட்ச பணவீக்கம் பதிவான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு (6.81%) முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ஒடிசா (6.70%), மத்தியப் பிரதேசம் (6.68%), தெலங்கானா (6.64%) ஆகியவை உள்ளன.

பருவமழை குறைபாடு காரணமாக விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் மாதங்களிலும் உணவுப் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாகவே இருக்கும் எனச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.