📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 13, 2026 07:04 PM

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற வெங்காயம் தொடர்பான பிரச்சனையில், ரேஷன் கடைப் பணியாளர் தற்காலிக பணிநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் நாளை வேலைநிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ளனர்.

ரேஷன் கடைகளுக்கு தரமற்ற வெங்காயத்தை அனுப்பியது யார்? அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? என்றும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.

தரமற்ற வெங்காயத்தால் மக்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலையில் ரேஷன் கடை பணியாளர் மீதான தற்காலிக பணிநீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது.

வெளிச்சந்தைகளில் வெங்காயம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தமிழக அரசு வெங்காய விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மதுரவாயில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு தரமற்ற வெங்காயம் விற்பனை செய்யப்பட்ட புகார் எழுந்தது. அந்த புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளரைதற்காலிக பணி நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப் பதிவாளர் உத்தரவிட்டார்.

ரேஷன் கடை பணியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய அளவில் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது