📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 24, 2026 11:00 AM

 தமிழில் கும்பாபிஷேகம்; அவகாசம் கேட்கும் அரசு

 தமிழில் கும்பாபிஷேகம்; அவகாசம் கேட்கும் அரசு

மதுரை: கரூர் மாவட்டம், தாந்தோணியை சேர்ந்த தமிழ் ராஜேந்திரன், தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.

அரசு தரப்பு, 'இதே நிவாரணம் கோரிய மற்றொரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அங்கு ஜூலை 10ல் விசாரணைக்கு வருகிறது. தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உடன்படுகிறோம். நிபுணர் குழுவிடம் ஆலோசனை நடக்கிறது. கால அவகாசம் தேவை' என, தெரிவித்தது.

விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.