தமிழ், தற்காப்புக்கலை, பைக் ரைடிங், பாலிவுட் என்ட்ரி... பியூட்டி பொண்ணு ப்ரீத்தி முகுந்தன்!
தமிழ், தற்காப்புக்கலை, பைக் ரைடிங், பாலிவுட் என்ட்ரி... பியூட்டி பொண்ணு ப்ரீத்தி முகுந்தன்!
தமிழ் சினிமா கதாநாயகிகளில், அதிலும் தமிழ் பேசத் தெரிந்த நாயகிகளில் ப்ரீத்தி முகுந்தனுக்குத் தனி இடமுண்டு.
- ரா.இக்னேஷியஸ்
பி.டெக் டு ஹீரோயின்..!
‘`சென்னையில பிறந்தாலும் நான் படிச்சது, வளர்ந்தது எல்லாமே திருச்சியிலதான். பி.டெக். படிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்தே டான்ஸ்ல ஆர்வம் வந்திடுச்சு. என்னோட நாலு வயசுலேயே வீட்டுல என்னை டான்ஸ் கிளாஸ்ல சேர்த்து விட்டுட்டாங்க. ஸ்கூல், காலேஜ்னு படிப்புல பிசியா இருந்தாலும், டான்ஸ் பிராக்டீஸையும் ஒருபக்கம் தொடர்ந்தேன். காலேஜ் போறது வரைக்குமே தமிழ்ல தான் பேசிட்டு இருந்தேன். இப்ப பேசற மாதிரி ஆங்கிலத்துல சரளமா பேச வராது. அப்புறம்தான் இங்கிலீஷ்ல பேசப் பழகினேன்.
மாடலிங் தான் சினிமா கதவைத் திறந்து விட்டுச்சு. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி விளம்பர படங்கள்ல நடிச்சிட்டிருந்தேன். தெலுங்குல நிறைய விளம்பர படங்கள்ல நடிச்சிருக்கேன். தொடர்ந்து விளம்பர படங்கள்ல நடிச்சதுல ஒருகட்டத்துல இங்கே நமக்கான ஸ்பேஸ் கிடைக்கலையோனு தோணுச்சு. என்னோட நட்பு வட்டத்துல நிறைய பேர், ‘நீங்க சினிமாவுக்கு முயற்சி செய்யலாமே’னு சொல்லிட்டிருந்தாங்க. என்கூட விளம்பர படங்கள்ல வேலை செய்த சிலர் சினிமா இண்டஸ்ட்ரியில இருந்ததால, அவங்களுக்கு என்னை பத்தி தெரிஞ்சிருந்தது. தெலுங்குலதான் அறிமுகமானேன். அப்ப சினிமா பத்தி எனக்கு அவ்வளவா எதுவும் தெரியாது. ஸோ, நடிக்க வர்றதுக்கு முன்னாடி அதுக்கான தகுதியை வளர்த்துக்கணும்னு நினைச்சேன். தியேட்டர், பயிற்சி பட்டறைகளுக்குப் போய் முறைப்படி நடிப்பு கத்துக்கிட்டேன். எனக்கு நம்பிக்கை வந்த பிறகே ஆடிஷன்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் தமிழ்ல ‘ஸ்டார்’ல அறிமுகமானேன்.
அப்பாவின் 'மிஸ் வேர்ல்டு' கனவு!
நான் இந்தத் துறைக்கு வர என் பெற்றோர்களும் ஒரு காரணம். எங்க அம்மா அவங்களோட சின்ன வயசுல ரொம்ப அழகா இருப்பாங்க. அவங்க கண்கள் அவ்ளோ க்யூட்டா இருக்கும். அம்மாகிட்ட எல்லோருமே ‘நீங்க நடிகையா... டான்ஸரா?'னு கேட்பாங்க. அப்படி ஒரு முறை அம்மாவைப் பார்த்துட்டு அவங்களுக்கு நடிப்பு வாய்ப்பு தேடி வந்தது. சின்னதா ஒரு ரோல்லயும் நடிச்சிருக்காங்க. அப்புறம், அம்மாவுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. அவங்க போஸ்ட் கிராஜுவேஷன் படிக்கும்போது, பிரெக்னன்டா இருந்தாங்க. அப்புறம் அவங்க நடிப்பு பக்கம் வரலை. என்னோட சின்ன வயசுல யாராவது எங்க அப்பாகிட்ட ‘உங்கப் பொண்ணு என்னவாகப் போறா?’னு கேட்டா, அப்பா ‘அவ மிஸ் வேல்ர்டு ஆகப்போறா’னு சொல்வார். இதெல்லாம் என் மனசுல ஓடிக்கிட்டிருந்தது. ‘எந்த ஒரு விஷயமா இருந்தாலும் முதல்ல முயற்சி பண்ணு. தயங்கி நின்னுடாதே’னு அப்பா சொல்வார். அம்மா-அப்பாவோட சப்போர்ட்டும் அவங்க கொடுத்த ஊக்கமும் என் முயற்சியும்தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கு!
பியூட்டி சீக்ரெட் இதுதான்!
பியூட்டி சீக்ரெட்னு எதுவும் கிடையாது. சன் ஸ்கிரீன் தவறாம யூஸ் பண்ணுவேன். உடற்பயிற்சி செய்வேன். நைட் தூங்கப் போறதுக்கு முன்னாடி, மறக்காம மேக்கப்கை நீக்கிடுவேன். எவ்வளவு நேரமானாலும் முகத்தை கிளென்ஸ் பண்ணிட்டு தான் தூங்கப் போவேன். நிறைய தண்ணீர் குடிப்பேன்.... பாசிட்டிவ்வா இருப்பேன்... அவ்வளவு தான்.’’
- க்யூட்டாக பதில் சொல்கிறார் ப்ரீத்தி.