தமிழ் மொழி போற்றும் கனடா
தமிழ் மொழி போற்றும் கனடா முத்தமிழ் பாடசாலையின் மாணவமணிகள் மொழி காக்கும் போர் வீரர்களாய் கனேடிய மண்ணில் தமிழை கற்கும் மைந்தர்களாய் தமிழ்நாடு கலாச்சார சங்கத்தின் தமிழ்ப்பள்ளி வருட நிறைவை தங்க பதக்கங்கள், சான்றிதழ்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர் மைக்கேல் பவர் பள்ளி வளாகம், மிஸிஸாகா, டொரொண்டோ, கனடா. மொழியை நேசிப்பதும் பேணிக்காப்பதும் மூத்தோர் மட்டுமல்ல எங்கள் கனேடிய இளம்தலைமுறைகளும் சிறிதும் சோம்பியதில்லை! ஏறக்குறைய 400க்கும் கூடுதலான தமிழ்ப்பிள்ளைகள் தமிழை கற்க ஆர்வம் கொண்டது பாரதி உன் கனவு வீணாகுமோ! பழமை, புதுமை, தொன்மை, வளமை,இனிமை கொண்ட எங்கள் தமிழ் மொழியை கனடா என்றும் கைவிடா! கண்கவர் கலைநிகழ்வுகள் குயிலாட்டம், ஒயிலாட்டம், பரதம், கீழடி பற்றிய நாடகம், பாடல், ஆடல் என தடபுடல். கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் வாழ்வே ஓர் இயந்திரமயமான சூழலிலும் தமிழர் தம் தாய் மொழியை மறப்பதில்லை! தமிழகம், அமெரிக்கா, கனடா என எத்துணை ஆசிரிய பெருமக்கள், தன்னார்வளர்கள் என தமிழ்த்தாயின் பிள்ளைகள் செவ்வனே எம்மொழியை கற்பித்து வருகின்றனர். இங்கு டொரொண்டோவில் நேரிடையாகவும், ஆன்லைனிலும் தமிழ் மொழி சொல்லித்தரப்படுகிறது. தமிழ்நாடு கலாச்சார சங்கத்தின் தலைவர் ஆனந்த் குருசாமி, மற்றும் உபதலைவர் ரேச்சல் டேனியல், இயக்குனர்கள் முருகன், கருணா, அம்ருதவர்ஷனி, நந்தினி, மாரிமுத்தரசன், பிரகதீஷ்வரன், பிரசாத் மோகன் ப்ரியா வடிவேல், சேகர் என பலர் தமிழ் மொழியை புலம் பெயர்ந்தாலும் உயிரினும் மேலாய் நேசிப்பது கனடா பெற்ற வரம்! தொடர்புகளுக்கு: muthamizhpaadasalai@tncsc.comwww.tncsc.com தமிழன் கால்பதித்த நாடெல்லாம் தமிழ்நாடே! கவிஞன் புகாரி - கனடாவிலிருந்து: சுதர்சன்