தமிழ் சமூகத்தின் சிந்தனையோடு பயணிக்கும் தினமலர் அர்ஜுனமூர்த்தி புகழாரம்
சென்னை: பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு தமிழக தலைவர் அர்ஜுனமூர்த்தி வாழ்த்து செய்தி:
செய்திகளை, தமிழ் கோட்பாடுடன் தருவதோடு மட்டுமல்லாமல், உண்மை, நம்பிக்கை, சமூக பொறுப்பு ஆகியவற்றை தன் அடித்தளமாக கொண்டு, 75 ஆண்டுகளாக, தமிழ் சமூகத்தின் சிந்தனையோடும், வாழ்வியலோடும் பயணித்து வரும், 'தினமலர்' நாளிதழின் பணி போற்றுதலுக்குரியது.
தமிழின் பண்பாடு, கலாசாரம், மரபு, நாகரிகம் மற்றும் தமிழர் வாழ்வியல் விழுமியங்களை பேணி பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்ததில், 'தினமலர்' பங்களிப்பு தனி சிறப்பு வாய்ந்தது.
இது ஒரு நாளிதழின், 75 ஆண்டுகால பயணம் மட்டுமல்ல; தமிழ் சமூகத்துடன் இணைந்து பயணித்த, 75 ஆண்டுகால நம்பிக்கையின் முத்திரை. 'தினமலர்' தொடர்ந்து, உண்மையை உரைத்து, தமிழையும், தமிழர் மரபையும் உயர்த்தி, சமூகத்திற்கு வழிகாட்டும் பணியை, இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாக தொடரட்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாசியுடன், 75 ஆண்டுகளாக தமிழ் சமூகத்திற்காற்றிய அரும்பணிக்கு கிடைத்த உச்சபட்ச அங்கீகாரமாக, இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம், தினமலரின் சேவைக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கே கிடைத்த பெருமை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.