📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 24, 2026 06:01 AM

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் என்னென்ன?

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் என்னென்ன?

திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் என்னென்ன?

இந்தச் சம்பவம், ஆபத்தான ரசாயனப் பொருட்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் தொழிற்சாலைகளின் பாதுகாப்பை ஒழுங்குபடுத்தும் தொழிற்சாலைகள் சட்டம், 1948 (Factories Act, 1948) மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலை விதிகள் (Tamil Nadu Factories Rules, 1950) என்ன கூறுகின்றன என்பதைப் பார்க்கலாம்.

அமோனியா ஏன் பயன்படுத்தப்படுகிறது?

அமோனியா (NH₃) என்பது குளிர்பதன அமைப்புகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் ரசாயன வாயுவாகும். குறிப்பாக இறால், மீன், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கும் 'Cold Storage' மற்றும் 'Refrigeration' அமைப்புகளில் அமோனியா முக்கிய குளிரூட்டியாக (Refrigerant) பயன்படுகிறது.

இறால் பதப்படுத்தும் ஆலைகளில் குளிர்பதனக் குழாய்கள் மற்றும் சேமிப்பு அமைப்புகளில் அமோனியா பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

அமோனியா கசிவு ஏன் ஆபத்தானது?

அமோனியா வாயு கசிவு ஏற்பட்டால்,

கண் எரிச்சல் மற்றும் கண்களில் நீர் வடிதல்

மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல்

கடுமையான இருமல்

மூச்சுத்திணறல்

நுரையீரல் பாதிப்பு

அதிகளவு வாயுவைச் சுவாசித்தால் உயிரிழப்பு

போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

தொழிற்சாலைகள் சட்டம் என்ன சொல்கிறது?

Section 7A: தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு

இந்த பிரிவின்படி தொழிற்சாலை நிர்வாகம்,

பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) வழங்க வேண்டும்.

ரசாயன அபாயங்கள் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.

அவசரக்கால நடவடிக்கை நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

எனச் சட்டம் வலியுறுத்துகிறது.

Sections 21 முதல் 40 வரை: பாதுகாப்பு விதிகள்

இந்தப் பிரிவுகளின் கீழ்,

இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

கசிவுகள் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் அமைப்புகள் இருக்க வேண்டும்.

அவசரக்கால வெளியேறும் வழிகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

தீ விபத்து தடுப்பு வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபத்தான தொழிற்சாலைகளுக்குக் கூடுதல் விதிமுறைகள்

Risk Assessment மேற்கொள்ள வேண்டும்.

Safety Audit நடத்த வேண்டும்.

Emergency Response Plan தயாரித்து வைத்திருக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே விளக்கம் அளிக்க வேண்டும்.

கசிவு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி வழங்க வேண்டும்.

விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும்?

தொழிற்சாலைகள் சட்டத்தின் Section 88-ன் படி, கடுமையான காயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் உடனடியாக தொழிற்சாலை ஆய்வாளருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதன் பின்னர் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் (DISH) விசாரணை மேற்கொண்டு விபத்திற்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் குறித்து ஆய்வு நடத்தும்.

விசாரணையில் எழும் முக்கிய கேள்விகள்

தொழிற்சாலைக்குச் செல்லுபடியாகும் உரிமம் இருந்ததா?

அமோனியா சேமிப்பு மற்றும் குளிர்பதன அமைப்புகள் முறையாகப் பராமரிக்கப்பட்டனவா?

Safety Audit கடைசியாக எப்போது நடத்தப்பட்டது?

வாயு கசிவைக் கண்டறியும் Gas Detection System செயல்பாட்டிலிருந்ததா?

தொழிலாளர்கள் PPE பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்தார்களா?

Emergency Exit மற்றும் அவசரக்கால வெளியேற்ற நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டனவா?

Fire NOC மற்றும் பிற பாதுகாப்பு அனுமதிகள் பெறப்பட்டிருந்தனவா?

தொழிற்சாலையில் Safety Officer நியமிக்கப்பட்டிருந்தாரா?

Section 88-ன் கீழ் விபத்து பதிவு செய்யப்பட்டதா?

பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா?

திருவள்ளூர் மாவட்டத்தில் 9 உயிர்களைப் பலிகொண்டுள்ள இந்தச் சம்பவம், தொழிற்சாலைகளில், குறிப்பாக ஆபத்தான ரசாயனப் பொருட்களைக் கையாளும் நிறுவனங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.