📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 30, 2026 09:02 PM

திருச்செந்தூரில் திடீரென 150 அடிக்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் திடீரென 150 அடிக்கு உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் கடலின் இயல்பு நிலையில் மாற்றம் ஏற்பட்டு நேற்று இரவு கோவில் நாழிக்கிணறு அருகில் இருந்து சந்தோஷ மண்டபம் வரை சுமார் 150 அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது.

திருச்செந்தூர் கடல் பொதுவாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள் வாங்குவதும், சில நேரங்களில் அதிக சீற்றத்துடன் வெளியே வருவதும் இயல்பான ஒன்றாக மாறி வருகிறது.

150 அடி உள்வாங்கியது

இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. பொதுவாக பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்கள் , திருப்பணி வேலைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் போது பழைய சிலைகளை புனித நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள் மற்றும் கடலில் போடுவது வழக்கம்.

பெண் சுவாமி சிலை

பக்தர்கள் வழக்கமாக புனித நீராடும் இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடினர். இன்று காலையில் கடல் இயல்பு நிலைக்கு வந்தது.