📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 01, 2026 04:03 AM

தவெக - பாமக கூட்டணியா? விசிக வாக்குகள் முழுமையாக சேர விடாமல் சதி

தவெக - பாமக கூட்டணியா? விசிக வாக்குகள் முழுமையாக சேர விடாமல் சதி

தவெக - பாமக கூட்டணியா? விசிக வாக்குகள் முழுமையாக சேர விடாமல் சதி - திருமாவளவன் காட்டம்..

சென்னை: பேஸ்புக் நேரலையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் ; மதுராந்தகம் தொகுதியில் தவெகவுக்கு ஆதரவாக விசிக சார்பில் இன்று நடத்தப்பட இருந்த பரப்புரை பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி செல்வதால், பரப்புரையை திட்டமிட்டபடி நடந்த முடியவில்லை. நாளை (அக்.1) 'ம.ச வெ. கூட்டணி சார்பில்' நடக்கும் பரப்புரை கூட்டத்தில் விசிகவினர் பங்கேற்க வேண்டும் .

தவெக கூட்டணியில் பாமக இடம்பெறப் போகிறது என்கிற செய்தியை திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக இருக்காது என்பதை 14 ஆண்டுகளாக சொல்லி, அதில் உறுதியாக இருக்கிறோம் தவெக கூட்டணியில் பாமக இடம் பெரும் என்ற செய்தியை பரப்பினால், களத்தில் விசிகவினர் தவெக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க மாட்டார்கள், விசிகவின் ஆதரவு முழுமையாக சேராது என நினைக்கிறார்கள். இப்படி செய்தால் விசிகவினர் பின்வாங்குவார்கள், விசிக வாக்குகளை தவெகவுக்கு செல்ல விடாமல் தடுக்கலாம் என கணக்குப் போடுகிறார்கள், அதில் நாம் உறுதியாக இருக்கிறோம். நமக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை என்று கூறினார்.