தீபாவளி பண்டிகைக்கு 95 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறதா..?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 95 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
சிறப்பு ரெயில்கள்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். ரெயில் டிக்கெட் முன்பதிவை பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது.
பயணிகள் வசதி
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது. ஏராளமானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ததால், ஒருசில நிமிடங்களிலேயே அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பலரும் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
இவர்கள் தீபாவளி சிறப்பு ரெயில் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். எனவே, பயணிகளின் வசதிக்காக நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு 95 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.