📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 27, 2026 09:33 PM

டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு

டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு

டெண்டர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைனிலேயே நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: நகராட்சி டெண்டர்கள் முன்வைப்பு தொகை மற்றும் பாதுகாப்பு தொகையை ஆன்லைன் முறையில் மட்டுமே பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இணையதளம் வாயிலாக நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நகராட்சி நிர்வாக இயக்குநரக கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டெண்டர் நடைமுறைகளிலும், கட்டட திட்ட அனுமதிகளிலும் முறையான சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெண்டர் செயல்முறைகளில் விண்ணப்பதாரர்களின் விவரங்களை முன்கூட்டியே அறியும் வாய்ப்புள்ள கள ஆய்வு சான்று மற்றும் உபகரணங்களின் இருப்பு சான்றை கட்டாயம் கேட்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்வைப்பு தொகை மற்றும் பாதுகாப்பு தொகையை ஆன்லைன் முறையில் மட்டுமே பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களை தேவையின்றி நேரில் வரவழைக்கப்படக் கூடாது என்றும் கட்டட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை வேண்டும் எனவும் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n