Tamil Nadu Power Shutdown: அலர்ட்! ஜூன் 1
Tamil Nadu Power Shutdown: அலர்ட்! ஜூன் 1-ல் இந்த மாவட்டங்களில் மின் தடை: எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்!
Tamil Nadu Power Shutdown (01-06-2026): தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது
Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 1 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்
தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி
இதையும் படிங்க: கோவை மக்களே அலர்ட்! மாதத்தின் முதல் நாள் பவர் கட் - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்