📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 01, 2026 11:03 PM

டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்!

டாஸ்க்கும் வேணாம்.. ஒன்னும் வேணாம்.. ரூ.5 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர்!

சென்னை: செப்டம்பர் 5ஆம் தேதி மிகபிரம்மாண்டமாக தொடங்கி, தினமும் சண்டை, சர்ச்சைகள் மற்றும் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், தற்போது யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று ஆரத்தி வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக போட்டியாளர் ஆனந்தியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததால், அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினார்.

இதனிடையே, ஏற்கனவே எவிக்ட் ஆகி வெளியேறிய ஜாவித், சாவின்யா மற்றும் லக்ஷ்மி பிரியா ஆகிய மூவரும் ரீ-என்ட்ரி கொடுத்து வீட்டுக்குள் வந்திருப்பது ஆட்டத்தை அப்படியே தலைகீழாக மாற்றியுள்ளது. இதில் தற்போது நடிகர் குமரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். வீட்டிற்குள் மீண்டும் வந்த ரீ-என்ட்ரி போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஒரு விசித்திரமான டாஸ்க்கைக் கொடுத்தார். அதன்படி, ஜாவித் - தன்வியாவையும், சாவின்யா - அஸ்மிதாவையும், லக்ஷ்மி பிரியா - தமிழ் குமரனையும் தேர்வு செய்தனர்.

பிக் பாஸ் சீசன் 10: தாங்கள் தேர்வு செய்த போட்டியாளர்களுடன் கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு ஜோடியாகவே சுற்றி வர வேண்டும் என்றும், யார் அந்த கயிற்றை முதன்முதலில் கழற்றுகிறார்களோ அவர்கள் நேரடியாக எலிமினேட் செய்யப்படுவார்கள் என்றும் பிக் பாஸ் அறிவித்தார். முன்னதாக, லக்ஷ்மி பிரியாவுக்கும் குமரனுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. குமரன் பிக் பாஸ் வீட்டில் எதுவுமே செய்யாமல் சும்மா இருக்கிறார் என்று லக்ஷ்மி பிரியா குற்றம் சாட்டினார். அதற்கு பதிலடி கொடுத்த குமரன், நான் இந்த வீட்டில் இருப்பதே தெரியவில்லை என்று சொல்றீங்க வீட்டை விட்டு வெளியே போயிட்டுத் திரும்ப உள்ள வந்த உங்களுக்கு தான் வெளியில் யார் எப்படி விளையாடுகிறார்கள், யார் மக்கள் மனதில் இருக்கிறார்கள் என்று தெரியும். அதை விட்டுட்டு வெளியில் போய்விட்டு வந்த நீங்கள் இப்படி கருத்து பேசக்கூடாது என பேசி மூக்கை உடைத்தார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்: இந்நிலையில், லக்ஷ்மி பிரியாவுடன் கயிற்றை கட்டிக்கொண்டு விளையாடி வந்த குமரன், திடீரென அந்த கயிற்றை கழற்றிவிட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அதுமட்டுமன்றி, பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு குமரன் வெளியேறி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளராகவும், டாஸ்க்குகளில் தனது 100% உழைப்பைக் கொடுத்து வந்தவருமானகுமரன் இப்படி திடீரென ரூ. 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.