ரூ.15 கோடி கோவில் நிதி பயன்படுத்தி கார் பார்க்கிங்; ரத்து செய்தது அறநிலையத்துறை
சென்னை: குன்னுாரில் ரூ.15 கோடி கோவில் நிதி பயன்படுத்தி கார் பார்க்கிங் கட்டும் பணியை ரத்து செய்தது அறநிலையத்துறை.
கடந்த தி.மு.க., ஆட்சியில், குன்னுார் விநாயகர் கோவில் பணம் 15 கோடி ரூபாயில், வாகன நிறுத்துமிடம் கட்ட திட்டமிட்டதாக சட்டசபையில் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக சட்டசபையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் ரமேஷ், ''தி.மு.க., ஆட்சியில், கோவில்களை வணிக நோக்கில் மாற்ற முயற்சிகள் நடந்தன.
ஒட்டுமொத்தமாக மாதந்தோறும், 500 பக்தர்கள் தான் வருகின்றனர். அவர்களுக்கு கழிப்பறை கூட இல்லாத போது, பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் எதற்கு?'' என கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இன்று (ஜூன் 23) குன்னுாரில் ரூ.15 கோடி கோவில் நிதி பயன்படுத்தி கார் பார்க்கிங் கட்டும் பணியை ரத்து செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.