📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 20, 2026 12:03 PM

ரோஹித், விவிஎஸ் லக்ஷ்மனுடன் தேவையில்லாத மோதல்.. அஜித் அகர்கர் பதவிக்கு வேட்டு.. உள்ளே நடந்தது என்ன?

ரோஹித், விவிஎஸ் லக்ஷ்மனுடன் தேவையில்லாத மோதல்.. அஜித் அகர்கர் பதவிக்கு வேட்டு.. உள்ளே நடந்தது என்ன?

ரோஹித், விவிஎஸ் லக்ஷ்மனுடன் தேவையில்லாத மோதல்.. அஜித் அகர்கர் பதவிக்கு வேட்டு.. உள்ளே நடந்தது என்ன?

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்து அஜித் அகர்கர் விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் பதவி விலகுவதற்கு, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த சர்ச்சை மற்றும் விவிஎஸ் லக்ஷ்மனுடன் ஏற்பட்ட மோதலே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போது, லார்ட்ஸ் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியில் இருந்து கழற்றிவிட அகர்கர் முடிவெடுத்தார். தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 2027 உலகக் கோப்பைக்கு இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு குறைந்தது 20 ஒருநாள் போட்டிகளிலாவது வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், வயதான ரோஹித் தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் சோபிக்க மாட்டார் எனவும் அகர்கர் கருதினார்.

ஆனால் உலகக் கோப்பையில் ஆட விரும்பிய ரோஹித் சர்மா, பிசிசிஐ உயர் அதிகாரியிடம் நேரடியாக முறையிட்டார். இதையடுத்து பிசிசிஐ ரோஹித்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதால் அஜித் அகர்கர் கடும் அதிருப்தி அடைந்தார்.

அதேபோல், பிசிசிஐ உயர்திறன் சிறப்பு மையத் தலைவரான விவிஎஸ் லக்ஷ்மனுடன் அகர்கருக்கு கடுமையான கருத்து வேறுபாடு வெடித்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முதன்மை அணியை அனுப்புவது, இந்தியா 'ஏ' அணிக்கான போட்டி அட்டவணைகள் மற்றும் காயமடைந்த வீரர்களின் ரகசியப் பட்டியல் ஊடகங்களில் கசிந்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையே விரிசல் அதிகரித்தது.

இறுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்விக்குப் பிறகு மும்பையில் பிசிசிஐ நடத்திய முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் அகர்கர் நேரில் வரவோ அல்லது காணொளி மூலமாகவோ பங்கேற்கவில்லை. இது பிசிசிஐ அதிகாரிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த மோதல்களே அஜித் அகர்கர் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து வெளியேற வழிவகுத்துள்ளது.