📅 Tuesday, 14 July 2026 IST | ஆனி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 14, 2026 09:34 PM

ரோஹித் செய்த செயல்.. இப்படியே போனால் சோலி முடிஞ்சுடும்.. முதல் ஒருநாள் போட்டியில் பெரும் ஏமாற்றம்

ரோஹித் செய்த செயல்.. இப்படியே போனால் சோலி முடிஞ்சுடும்.. முதல் ஒருநாள் போட்டியில் பெரும் ஏமாற்றம்

ரோஹித் செய்த செயல்.. இப்படியே போனால் சோலி முடிஞ்சுடும்.. முதல் ஒருநாள் போட்டியில் பெரும் ஏமாற்றம்

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதை அடுத்து இந்திய ஒருநாள் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது. 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்க வேண்டும் என்றால் தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடரில் அவர் ரன் குவிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் 259 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கை நோக்கி ஆடும் போது ரோஹித் சர்மா 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எப்போதும் அதிரடியாக ஆடும் ரோஹித் சர்மா ரன் குவிக்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக நிதான ஆட்டம் ஆடினார். ஆனால், அதிலும் சொதப்பி வெறும் 11 ரன்களே எடுத்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா துவக்கம் அளித்தனர். சுப்மன் கில் இயல்பாக ரன் குவித்த நிலையில் ரோஹித் ஆரம்பம் முதலே தடுமாறினார். அவர் ஆட்டமிழந்து வெளியேறிய பின் விராட் கோலி வந்தார்.

அவர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், விராட் கோலியும் ஏமாற்றம் அளித்தார். அவர் 6 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து இந்திய அணி 8.3 ஓவர்களில் 48 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

விராட் கோலியை விட ரோஹித் சர்மாவுக்கே ஒருநாள் அணியில் அழுத்தம் அதிகம் உள்ளது. அவரது தொடக்க வீரர் இடத்துக்கு ஜெய்ஸ்வால் தயாராக இருக்கிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பில் எல்லாம் அவர் ரன் குவித்து இருக்கிறார். எனவே, ரோஹித் சர்மா இங்கிலாந்து தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளில் சதம், அரைசதம் என பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்றால் அவரது இடத்தில் ஜெய்ஸ்வால் தான் இனி ஆடுவார்.