📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 01, 2026 02:00 PM

ராமின் ஏழு கடல் ஏழு மலை.. சாதனையா? சோதனையா? நெட்டிசன்களின் ட்விட்டர் விமர்சனம்!

ராமின் ஏழு கடல் ஏழு மலை.. சாதனையா? சோதனையா? நெட்டிசன்களின் ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சூரி, அஞ்சலி, நிவின் பாலி ஆகியோர் நடித்துள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி இருக்கும் இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

ஏழு கடல் ஏழு மலை: படம் பார்த்த ரசிகர் ஒருவர், ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாதி சூப்பர். கதை என்னனு ஒரு sneak peek-லயும், ராம் அவர்களே பேட்டியிலையும் சொல்லியிருக்காங்க. சாகா வரம் பெற்ற ஒருவரை தூக்கத்திலிருந்து சூரி எழுப்ப, அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதைக்களம். முதல் பாதி முழுக்க பெரும்பாலும் ரயிலேயே தான் கதை நகருது. அதுல சூரி அண்ணா நிறைய ஒன் லைன் ஸ்டோரி பண்ணியிருக்காங்க. ஆனா பெருசா க்ளிக் ஆகல. முதல் பாதியை கடக்க கொஞ்சம் அதீத பொறுமை தேவைப்படுது. அதுவும் சூரி அண்ணா, நிவின் பாலியை தொடர்ந்து ப்ரோ.. ப்ரோனு கூப்பிடுறது ஒரு கட்டத்தில் கொஞ்சம் கடுப்பாகிடுது.

ஈர்க்கும் இசை: யுவன் இசை சில இடங்களில் மட்டும் கவனம் ஈர்க்குது. அதேநேரம் காட்டுப் பகுதியில் நடக்குற காட்சிகள் நல்லா இருக்கு. குறிப்பா Pre-Interval முதல் Interval வரையிலான portions கொஞ்சம் engagingஆ இருந்தது. சினிபோட்டோகிராபி ரசிக்கும் படி இருக்குது. அஞ்சலி கதாபாத்திரம் பெருசா இம்பேக்ட் கொடுக்குற மாதிரி இல்லை. ரொம்ப எதிர்பார்த்துட்டேனோ என்னவோ... முதல் பாதி கொஞ்சம் டிசாபாயிண்ட் தான். பார்ப்போம்... இரண்டாம் பாதி எப்படி போகுதுனு பார்க்கலாம்.

தரமான படைப்பு: மற்றொரு ரசிகர், இயக்குநர் ராம் படைப்புகள், அவரின் ஒவ்வொரு படமும் ஒரு வாழ்வியலை பேசும்... அவரது படைப்புகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. காலங்கள் கடந்தாலும் அவரது படைப்புகள் பேசும். அந்த வகையில் இந்த "ஏழு கடல் ஏழு மலை" நிச்சயம் பேசப்படும் ... படத்தின் அந்த 3 நிமிட காட்சிகளே முழு படத்தை பார்க்க தூண்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

அழகான காட்சிகள்: ஏழு கடல் ஏழு மலை படம் தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான முதல் பாதி. அழகான காட்சிகளுடன் ஒரு வழக்கத்திற்கு மாறான உலகத்தை இயக்குனர் 'ராம்' உருவாக்கியுள்ளார். நிவின் பாலி மற்றும் சூரி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். யுவனின் பின்னணி இசை படத்தின் அனுபவத்தை மேலும் உயர்த்துகிறது. சில இடங்களில் வேகம் குறைவாக இருந்தாலும், படத்தின் களம் நம்மை தொடர்ந்து ஈர்க்கிறது. வலுவான இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஏதோ மிஸ்: ராம் அவர்களின் கதை சொல்ற விதம் அழகா இருக்கும் ஆனா இந்த படம் ஏதோ மிஸ் ஆன மாதிரி பீல் வருகிறது. இரண்டாம் பாதியில் சூரி அண்ணா நிவின் கிட்ட அட்வைஸ் கேப்பாரு அது நல்லா இருந்துச்சு. அது என்னமோ நமக்கே சொன்ன மாதிரி இருக்கும் என பதிவிட்டுள்ளார். ராம் முயற்சி பண்ணி பாருங்க.. மற்றவர்களுக்கு ரொம்ப ரொம்ப சுமார் ரகம் தான் என பதிவிட்டு இருக்கும் இவர் ஏழு கடல் ஏழு மலைக்கு 5க்கு 2.5 மதிப்பெண் அளித்துள்ளார்.