ராகுல் காந்தியின் பொய் பிரசாரங்களை தமிழக இளைஞர்கள் நம்பமாட்டார்கள்
ராகுல் காந்தியின் பொய்ப் பிரசாரங்களையும் அவதூறுகளையும் தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு என்ற பெயரிலான அரசியல் மேடையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உண்மைக்குப் புறம்பான அவதூறுகளையும் கற்பனையான குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசியுள்ளார். தமிழக மாணவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் தேட முயலும் ராகுல் காந்தியின் ஒவ்வொரு பொய்ப் பிரசாரத்திற்கும் வரலாற்று உண்மைகளும் புள்ளிவிவரங்களுமே தகுந்த பதிலடியாக அமையும்.
அப்பட்டமான இரட்டை வேடம்
தாய்மொழி கல்விக்கே முழு முன்னுரிமை
1960-களில் தமிழகத்தில் இந்தியைத் திணித்ததோடு, அதை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காங்கிரஸ், இன்று மொழிப்பற்று நாடகமாடுவது அப்பட்டமான ஏமாற்று வேலை! மாறாக, தமிழின் பெருமையை ஐ.நா. வரை முழங்கி, புதிய நாடாளுமன்றத்தில் 'செங்கோலை' நிறுவி, 'காசி தமிழ் சங்கமம்' நடத்தியவர் பிரதமர் மோடி. மேலும், தேசிய கல்விக் கொள்கை (NEP) மூலம் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழி வழிக் கல்விக்கே முழு முன்னுரிமை அளித்திருப்பது பிரதமர் மோடியின் அரசுதான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
வெற்று நாடகம்
இறுதியாக, ஜனநாயகத்தைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் ராகுல் காந்தி பேசுவது நகைப்புக்குரியது. நாட்டில் அவசரநிலையை (Emergency) பிரகடனம் செய்து ஜனநாயகத்தை நசுக்கிய வரலாற்றைக் கொண்ட காங்கிரஸுக்கு, ஜனநாயகம் பற்றிப் பேச எந்தத் தார்மீக உரிமையும் இல்லை. மேலும், தனது இறுதிப் பேருரையில் "காங்கிரசை ஒழிப்பதே எனது முதல் வேலை" என முழங்கியிருக்கும் பெரியாரை, தேர்தல் வாக்குகளுக்காக இன்று காங்கிரஸ் துணைக்கு அழைப்பதுதான் அப்பட்டமான சந்தர்ப்பவாதம்! ராகுல் காந்தியின் இந்த வெற்று நாடகங்களை விழிப்புணர்வு கொண்ட தமிழக இளைஞர்களும், மாணவர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.