பள்ளி நண்பரின் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத் தந்த பிரதமர் மோடி
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியை, அவரது பள்ளி நண்பர் சந்தித்து பேசிய நிலையில், அவரிடம் இருந்து அபகரித்த நிலத்தை பாஜக எம்.எல்.ஏ. திரும்ப ஒப்படைத்தார்.
பிரதமரின் பள்ளி நண்பர்
குஜராத்தின் வாத்நகரில் உள்ள பி.என்.உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடியுடன் ஒன்றாக படித்தவர் அஸ்கர் அலி வோரா. இவர், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள மிரா ரோடு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். கடந்த 1989-ல், மும்பையின் பயந்தர் கிழக்கு நவகர் பகுதியில், 2,810 சதுர மீட்டர் (சுமார் 30 ஆயிரம் சதுர அடி) நிலத்தை அஸ்கர் அலி வாங்கினார்.
போலி ஆவணங்கள்
பிரதமருடன் சந்திப்பு
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய நிலத்தில் பயந்தர் மாநகராட்சி நகரத் திட்டமிடல் துறை கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் பள்ளி நண்பரான பிரதமர் மோடியை டெல்லியில், அஸ்கர் அலி கடந்த 8-ம்தேதி சந்தித்து பேசினார். அப்போது, தன் சொத்து பிரச்சினை குறித்து அவரிடம் முறையிட்டார்.
இந்த விவகாரத்தில் நகராட்சி, வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் தன் புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாக அவர் குற்றஞ்சாட்டினார். போலி ஆவணத் தயாரிப்பு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடவும் அஸ்கர் அலி, பிரதமரிடம் கோரினார்.
சிறப்பு கூட்டம்
சுமுக முடிவு