IND vs AFG: கிங் விராட் கோலியை சமன் செய்த அபிஷேக் சர்மா.. டி20 கிரிக்கெட்டின் புதிய ராஜா
IND vs AFG: கிங் விராட் கோலியை சமன் செய்த அபிஷேக் சர்மா.. டி20 கிரிக்கெட்டின் புதிய ராஜா
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 30 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட், உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அவரது 10-வது சதமாகும்.
இதன் மூலம், முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்து, அதிக டி20 சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் அபிஷேக் சர்மா இணைந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் இந்த இடது கை ஆட்டக்காரர், வெறும் 34 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் குவித்து, 317.65 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் தனது ஆட்டத்தை முடித்தார்.
இது இந்திய ஆடவர் கிரிக்கெட் வரலாற்றிலும், முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் அதிவேக சதமாகப் பதிவாகியுள்ளது. அதிக டி20 சதங்கள் அடித்த இந்திய பேட்டர்களின் பட்டியலில் விராட் கோலி மற்றும் அபிஷேக் சர்மா தலா 10 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 8 சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் நீடிக்கின்றனர்.
அபிஷேக் சர்மாவின் முதல் டி20 சதம் ஜனவரி 2021-ல் பஞ்சாப் அணிக்காக ரயில்வேஸ் அணிக்கு எதிராகப் பதிவானது. அப்போட்டியில் அவர் 62 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர், 2023-24 காலக்கட்டத்தில் ஆந்திரா மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 112 ரன்கள் எடுத்தது உட்பட மூன்று சதங்களை விளாசினார். ஜூலை 2024-ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவு செய்தார்.
அபிஷேக்கின் மிக அதிரடியான சதம் டிசம்பர் 2024-ல் மேகாலயாவுக்கு எதிராகப் பதிவானது. இதில் அவர் வெறும் 29 பந்துகளில் 365.51 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 2025-ல் இங்கிலாந்துக்கு எதிராக 54 பந்துகளில் 135 ரன்களும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 55 பந்துகளில் 141 ரன்களும் குவித்தார். அதே ஆண்டின் பிற்பகுதியில் பெங்கால் அணிக்கு எதிராக அவர் அடித்த 148 ரன்கள் அவரது அதிரடி ஆட்டத்திற்கு மற்றொரு சான்றாகும்.
2026-ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 135 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து, தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்த புதிய சதத்தை எட்டியுள்ளார் அபிஷேக்.மறுபுறம், விராட் கோலியின் 10 சதங்களில் 6 ஐபிஎல் சதங்கள் அடங்கும்.