📅 Tuesday, 07 July 2026 IST | ஆனி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 23, 2026 03:02 AM

பள்ளி மாணவிகளை விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசம்; 2 வாலிபர்கள் கைது

பள்ளி மாணவிகளை விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசம்; 2 வாலிபர்கள் கைது

கேரளம் மாநிலம், மூணாறு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் பள்ளிக்கு 3 நாட்களாக தாமதமாக வந்துள்ளனர். இது குறித்து ஆசிரியர்கள் கேட்டபோது, சமூக வலைதளம் மூலம் பழகிய 2 பேரை சந்திக்க சென்றதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மூணாறு போலீசார் நடத்திய விசாரணையில், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான 2 பேர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவிகள் தெரிவித் துள்ளனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இதில் தொடர்புடையவர்கள் தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகு தியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் திண்டுக்கல்லில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மூணாறு போலீசார் திண்டுக்கல் சென்று தமிழக போலீசாரின் உதவியுடன் சுரேஷ் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

இன்ஸ்டா பழக்கம்

இது குறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் சுரேசுடன் பழகி வந்துள்ளார். கடந்த 15-ந்தேதி சுரேஷ் தனது நண்பருடன் மூணாறுக்கு வந்து, அந்த மாணவியையும், அவரது தோழியையும் சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரையும் ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். 2 நாட்கள் உல்லாசமாக இருந்து விட்டு அவர்களை பள்ளிக்கு செல்லுமாறு தெரிவித்தனர்.

இது குறித்து வெளியில் யாரிடமும் கூறவேண்டாம் எனவும் மீண்டும் மற்றொரு நாள் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மாணவிகள் உடல் நிலை பாதிக்கப்பட்டு தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

பள்ளி மாணவிகள் அறிமுகமில்லாத நபர்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.