📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 15, 2026 08:34 PM

பெரியார், அண்ணா பேரணிக்கு தவெக கூட்டணி அரசு அனுமதி மறுப்பு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பெரியார், அண்ணா பேரணிக்கு தவெக கூட்டணி அரசு அனுமதி மறுப்பு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பெரியார், அண்ணா பேரணிக்கு தவெக கூட்டணி அரசு அனுமதி மறுப்பு: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஈரோட்டில் தந்தை பெரியார் பேரணிக்கும், குடியாத்தத்தில் அண்ணா பேரணிக்கும், இந்த Circus அரசின் போலீஸ் அனுமதி மறுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்..? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பான சமூக வலைதள பதிவில்:

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?

பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.