PAK vs ENG: மீண்டும் திணறும் பாகிஸ்தான்.. பேட்டிங்கே செய்ய தெரியாதா? 84 ரன்களுக்கு 7 பேர் அவுட்
PAK vs ENG: மீண்டும் திணறும் பாகிஸ்தான்.. பேட்டிங்கே செய்ய தெரியாதா? 84 ரன்களுக்கு 7 பேர் அவுட்
பர்மிங்காம்: மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்தின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணி தனது பிளேயிங் லெவனில் நான்கு மாற்றங்களுடன் களம் இறங்கியது. இதில் மூன்று அறிமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். எனினும், இங்கிலாந்தின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். மதிய உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 22.6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் தங்களது துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார். அவர் 5 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக முகமது இம்ரானின் விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை 84 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளினார். அவருக்கு பக்கபலமாக ஆலி ராபின்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் சவுத் ஷகீல் பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவர் 38 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பு அறிமுக வீரர் ரசாவுல்லா களம் புகுந்தார். ஆட்டத்தின் போது பந்து தாக்கியதில் அவரது வலது கை விரல்களில் காயம் ஏற்பட்ட போதிலும், முதலுதவி சிகிச்சை பெற்று தொடர்ந்து விளையாடினார்.
அவர் 10 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஷகீலுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார். ஜோஷ் டங் வீசிய 22வது ஓவரின் கடைசி பந்தில் ரசாவுல்லா அடித்த பவுண்டரி மூலம் பாகிஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் வெறும் 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு வெறும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்து ரசிகர்களை வெறுப்படைய செய்தார்.