📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 22, 2026 12:01 PM

ஓடிடி ரசிகர்களுக்கு அடுத்து ஒரு தரமான சம்பவம் ஆன் தி வே.. ’ஆக்டோபஸ்’ சீரிஸ் இப்படியொரு கதையா?

ஓடிடி ரசிகர்களுக்கு அடுத்து ஒரு தரமான சம்பவம் ஆன் தி வே.. ’ஆக்டோபஸ்’ சீரிஸ் இப்படியொரு கதையா?

சென்னை: விலங்கு, வாரண்ட், தலைமை செயலகம், அயலி, ஃபிங்கர் டிப் என ஏகப்பட்ட தரமான வெப்சீரிஸ்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வரும் ஜீ5 தமிழ் ஓடிடியில் அடுத்து ஒரு பக்காவான மர்மமும் ரகசியங்களும் நிறைந்த பரபரப்பான 'Octopus' தொடரை அறிவித்தது ஜீ5 தமிழ் (ZEE5 Tamil).

ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில், 7 எபிசோடுகளைக் கொண்ட ஜீ5 தமிழின் புதிய ஒரிஜினல் சீரிஸாக 'Octopus' உருவாகியுள்ளது. இதில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆக்டோபஸ் வெப்சீரிஸ் விரைவில்: பல்வேறு பாணிகளில் சிறந்த கதைகளை வழங்கி, அசல் தொடர்கள் பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ள ஜீ5 தமிழ், தற்போது 'Octopus' என்ற விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடரை ரசிகர்களுக்கு வழங்கத் தயாராகியுள்ளது. வழக்கமான கதையோட்டங்களிலிருந்து மாறுபட்டு, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்தொடர், மர்மம், உணர்வுகள் மற்றும் சுவாரசியத்தை ஒருங்கே கொண்டுள்ளது.

ஆக்டோபஸ் கதை என்ன?: ஒரு இளம் பெண் திடீரென காணாமல் போவதைத் தொடர்ந்து, அவளைப் பற்றிய உண்மையைக் கண்டறிய அவளது அக்கம் பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். இந்தத் தேடல், அவர்கள் சற்றும் எதிர்பாராத பல மறைக்கப்பட்ட ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறது. மர்மம், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களை மையமாக வைத்து இக்கதையின் திரைக்கதை நகர்கிறது.

ஜீ5 தமிழின் சமூக வலைத்தள பக்கங்களில் 'Octopus' தொடரின் அறிமுக விளம்பரம் (Launch Promo) வெளியானது முதலே, இணையத்தில் இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் சுவாரசியமான கதைக்களம், ரசிகர்களிடையே பல்வேறு யூகங்களையும் கணிப்புகளையும் உருவாக்கி, விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடராக மட்டுமின்றி, நம்பிக்கை, உறவுகள், மன உறுதி மற்றும் மனிதர்களுக்கு இடையேயான பிணைப்பு போன்ற ஆழமான உணர்வுகளையும் 'Octopus' ஆராய்கிறது. அன்றாட யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்தொடர், இறுதிக்காட்சி வரை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் விறுவிறுப்பையும் தக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.