📅 Thursday, 09 July 2026 IST | ஆனி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 27, 2026 06:33 PM

நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை: திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்

நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை: திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்

நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை: திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், கல்பாக்கம் ஊராட்சி பகுதியில் பகுதியில் வசித்துவரும் நரிக்குறவர் இனமக்களுக்கு நலவாரிய குடும்ப உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் கலந்துகொண்டு நரிக்குறவர் நலவாரிய குடும்ப உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி கூறியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை சேவைகளும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், கல்பாக்கம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இனமக்களுக்கு நரிக்குறவர் நலவாரிய குடும்ப உறுப்பினர் அட்டை கோரி விண்ணப்பித்திருந்தனர்.

அந்த விண்ணப்பங்கள் குறுகிய காலத்தில் பரிசீலனை செய்யப்பட்டு முதற்கட்டமாக 10 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வாயிலாக நரிகுறவர் நலவாரிய குடும்ப உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.அந்த மக்கள் வசிக்கும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், கல்பாக்கம் ஊராட்சி பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கான தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவும், ஆவணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார் மற்றும் நரிக் குறவர் இனமக்கள் கலந்து கொண்டனர்.

\n ${e.display_status||e.scheduleTime}\n

\n ${e.display_status+", "+e.scheduleTime}\n