📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 24, 2026 04:01 PM

நகை வாங்க ரெடியா மக்களே... GOOD NEWS காத்திருக்கு... என்னது தெரியுமா?

நகை வாங்க ரெடியா மக்களே... GOOD NEWS காத்திருக்கு... என்னது தெரியுமா?

நகை வாங்க ரெடியா மக்களே... GOOD NEWS காத்திருக்கு... என்னது தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாங்கும் மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்றும் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் படி நேற்று (23.09.2026) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ 1,13,080 க்கும், ஒரு கிராம் ரூ 14,135 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,080 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,12,000க்கும், கிராமுக்கு ரூ 135 குறைந்து ஒரு கிராம் ரூ 14,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் தங்கம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 2,280 அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ 250க்கும், கிலோவுக்கு ரூ 5000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ 2,50,000 விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி தொடர்ந்து மூன்று நாட்களாகவே தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல் குறைந்து வருவதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.