📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 23, 2026 11:05 PM

ஐபிஎல் 2027 ஏலம் எங்கு நடைபெறும்? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் 2027 ஏலம் எங்கு நடைபெறும்? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் 2027 ஏலம் எங்கு நடைபெறும்? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்களின் ஏலத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் நடத்த முடிவு செய்துள்ளது. இதனை பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்திய ஆண்டுகளில் வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் ஏலத்தை, மீண்டும் இந்தியாவிற்கே கொண்டு வர பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சவூதி அரேபியா, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாட்டு நகரங்களில் ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்னதாக இந்தியாவில் கொச்சியில் கடைசி ஏலம் நடைபெற்றது.

இந்த மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் பெரும்பாலான வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். மிகக் குறைவான எண்ணிக்கையிலான வீரர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் ஏலம் விடப்படுவர். ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை விடுவிக்கிறார்கள் என்பதற்கான கெடு வரும் நவம்பர் மாதம் 3வது வாரத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, மெகா ஏலங்களுடன் ஒப்பிடும்போது மினி ஏலங்களில் வீரர்களின் விலை மிக அதிகமாக இருக்கும். ஏனெனில், அணிகள் தங்களுக்கு தேவையான குறிப்பிட்ட வீரர்களைக் கைப்பற்ற கடுமையான போட்டியில் ஈடுபடுவது வழக்கம்.

"கடந்த ஆண்டு சவூதி அரேபியா, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய மூன்று வெளிநாட்டு இடங்களில் ஐபிஎல் ஏலத்தை வெற்றிகரமாக நடத்திய பின்னர், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோவாவில் ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

மினி ஏலத்திற்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஒவ்வொரு அணியும் தங்களது அணியை கட்டமைக்கும் முயற்சியில் இனி வரும் காலங்களில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவாவில் டிசம்பர் 2வது வாரத்தில் ஐபிஎல் மினி ஏலம் நடக்கலாம் என தெரிகிறது.