📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
பொன்னேரி அரசு மருத்துவமனை பெண் ஊழியர் மீது தீ வைப்பு: இளைஞர் பிரகாஷ் போலீசாரால் சுட்டுப்பிடிப்பு! சென்னையில் டெங்கு ஒழிப்பிற்காக பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணியில் 3,597 பணியாளர்கள்! மாநகராட்சி ஆணையர் தகவல் IND vs JAP: “ஜப்பான் ரசிகர்களுக்காக மழை வராமல் இருக்கணும்”.. இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேச்சு ஜோகூர் நெடுஞ்சாலை விபத்தில் சிங்கப்பூர் மோட்டார்சைக்கிளோட்டி மரணம் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற ரூ.100 கோடி மோசடி புகார்: பள்ளிக்கல்வி இணை இயக்குநரிடம் விசாரணை நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள்: புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்ணை அறிவித்தது தமிழக அரசு

Tamil Nadu September 22, 2026 08:03 AM

நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள்: புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்ணை அறிவித்தது தமிழக அரசு

நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள்: புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்ணை அறிவித்தது தமிழக அரசு

சென்னை: நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடு இருப்பின் 95008 - 01465 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு;

நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ற்கு மத்திய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வரால் சட்டசபை விதி 110ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156லிருந்து ரூ.289 ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131லிருந்து ரூ.159 ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027ல் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 2026ம் ஆண்டு செப்.1ம் தேதி முதல் கொள்முதல் பருவம் துவங்கப்பட்டு செப்.3ம் தேதி வரை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் திட்டத்தினை வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணை செப்.9ல் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027ல் சன்ன ரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750க்கும் பொதுரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600க்கும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் செப்.3 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் எவ்வித சிரமங்களின்றி தங்களது நெல்லினை விற்பனை செய்திடவும் அவ்வாறு விற்பனை செய்திடும் போது கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் பற்றியோ அல்லது பணம் வசூலிப்பதைப் பற்றியோ தெரிவிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 'உழவர் உதவி மைய Whatsapp எண் 9500801465-ல்' புகார் அளிக்கலாம்.

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.