“நான் 14,000 ரன்கள் குவித்ததற்கு ஒரு காரணம் இருக்கு”.. விமர்சகர்களுக்கு ஜோ ரூட் நெத்தியடி பதில்!
“நான் 14,000 ரன்கள் குவித்ததற்கு ஒரு காரணம் இருக்கு”.. விமர்சகர்களுக்கு ஜோ ரூட் நெத்தியடி பதில்!
லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட், சமீபகாலமாக எல்பிடபிள்யூ முறையில் அடிக்கடி ஆட்டமிழந்து வருவது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. அதற்கு தனது பாணியில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். ஜோ ரூட் தனது கடைசி 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 8 முறை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்தாலும் ஆட்டமிழக்கும் முறை தான் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 3 முறையும், அதற்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 6 முறையும் இதே முறையில் அவர் அவுட் ஆகியுள்ளார். இந்த தொடர் சரிவு குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 14,000 ரன்களைக் கடந்த உலகின் 2-வது வீரர் என்ற பெருமை பெற்ற ஜோ ரூட் இதற்கு நெத்தியடியாக பதிலளித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஜோ ரூட், அதில் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.