மூடப்படாத மதுக்கடை பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததும், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து கடைகளையும் மூடிவிட்டதாக, துறையின் அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகள் முறையாக மூடப்படவில்லை என, 'வீ தி லீடர்' இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை, ஆதாரங்களையும், பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை நகரின் சில பகுதிகளில் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து, 500 மீட்டர் தொலைவுக்குள் இயங்குகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இதுபோல, பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து, 500 மீட்டர் தொலைவுக்குள் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ அல்லது 'வீ தி லீடர்' அமைப்பின் மூலமாகவோ, கலெக்டரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.