📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 31, 2026 08:00 PM

முதல்வர் விஜய் நாளை திருச்சி வருகை; கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதல்வர் விஜய் நாளை திருச்சி வருகை; கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: முதல்வர் விஜய் நாளை திருச்சி வர உள்ள நிலையில், அங்குள்ள கலெக்டரலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைப்பதில் தீவிரமாக இருந்ததால், திருச்சிக்கு முதல்வர் விஜயால் செல்ல முடியவில்லை.

இந்த சூழலில், தவெகவுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை திருச்சி வர இருக்கிறார். மாலை 4 மணியளவில் தனியார் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெறும் நன்றி அறி​விப்பு பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​றுப் பேசுகிறார்.

முதல்வரின் வருகையையொட்டி,திருச்சியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

மேலும், இந்த மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிரத்யேக வீடியோ!

திருச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்: யார் பார்த்த வேலை? போலீஸ் தீவிரம் குறித்து சிறப்பு வீடியோ தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்