📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News May 28, 2026 12:33 AM

'முதல்முறையாக' ஈரான், அமெரிக்கா பறக்கவிடும் 'வெள்ளைக் கொடி'

'முதல்முறையாக' ஈரான், அமெரிக்கா பறக்கவிடும் 'வெள்ளைக் கொடி'

'முதல்முறையாக' ஈரான், அமெரிக்கா பறக்கவிடும் 'வெள்ளைக் கொடி' - என்ன சொல்கிறார்கள்?

ஈரான் போர் நிறுத்தம் விரைவில்? ஈரான், அமெரிக்கா பாசிட்டிவ் சிக்னல்!

ஈரான் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும், ஈரானும் ஒன்றாக 'ஈரான் போர் நிறுத்தத்திற்கு' பாசிட்டிவ் சிக்னலை தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் பேச்சு

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "ஈரான் உடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ஒன்று, ஒப்பந்தம் முடிவாகும். இல்லையெனில், நாம் சற்று மோசமான சில காரியங்களைச் செய்யப் போகிறோம். ஆனால், அப்படி நடக்காது என்று நம்புகிறேன்" என்று பேசியிருந்தார்.

ஈரான் என்ன சொல்கிறது?

இன்னொரு பக்கம், ஈரான் பக்கத்தில் இருந்து அந்த நாட்டின் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் பேசியிருக்கிறார். ஈரான் தரப்பு கூறியுள்ளதாவது, "தீர்வுக்கான அனைத்து வழிகளும் எங்கள் தரப்பில் திறந்தே இருக்கின்றன. ஆனால், வற்புறுத்தல் மூலம் ஈரானைச் சரண்டையச் செய்வது வெறும் மாயையாகத் தான் இருக்கும்".

பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போரில், இதுவரை அமெரிக்கா மட்டுமே அவ்வப்போது, போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது... ஈரான் போர் நிறுத்தத்தை விரும்புகிறது... அனைத்தும் பாசிட்டிவாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறி வந்தது.

ஆனால், இது தான் முதல் முறையாக இரண்டு தரப்புமே ஓபனாக போர் நிறுத்தம் குறித்து வெள்ளைக் கொடி காட்டியுள்ளது.

ஆக, இரண்டு தரப்புமே சண்டை சச்சரவு இல்லாமல், சுமூக தீர்வை எட்டினால் உலகத்திற்கே நல்லது.!