📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 28, 2026 04:03 PM

முதலமைச்சர் விஜய் மதுரை வருகையையொட்டி ஆகாஷ் குடும்பத்தினர் வீட்டுக் காவலில் வைப்பு!

முதலமைச்சர் விஜய் மதுரை வருகையையொட்டி ஆகாஷ் குடும்பத்தினர் வீட்டுக் காவலில் வைப்பு!

முதலமைச்சர் விஜய் மதுரை வருகையையொட்டி ஆகாஷ் குடும்பத்தினர் வீட்டுக் காவலில் வைப்பு!

மானாமதுரை: முதலமைச்சர் விஜய் மதுரை வருகையையொட்டி ஆகாஷ் குடும்பத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மானாமதுரையில் கடந்த மார்ச் 8ம் தேதி போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் ஆகாஷ் வீட்டில் இன்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த மார்ச் 6ம் தேதி நள்ளிரவில் கூலித்தொழிலார்கள் இரண்டு பேரை ஆகாஷ் டெலிசின் மற்றும் குணா என்பவரும் தாக்கியதையடுத்து மானாமதுரை தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் டெலிசின் மார்ச் 8ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறி ஆகாஷின் பெற்றோர் உடலை வந்த மறுத்து கொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சில நாடுகளுக்கு முன்பு சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் விஜய் வாகனத்தை வழிமறித்து ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில், இன்று மதுரையில் தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் வருவதையொட்டி மானாமதுரையில் உள்ள ஆகாஷின் வீட்டில் சிவகங்கை மாவட்ட ஏ.டி.எஸ்.பி பிரான்சிஸ் பார்க்கின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும், ஆகாஷின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

முதல்வர் விஜய் காலை முதல் மாலை 5 மணி வரை மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். எனவே, முதல்வர் விஜய் மீண்டும் சென்னைக்கு செல்லும் வரையில் ஆகாஷின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.